தர்ஹா நகர் நிருபர்-
தர்ஹா நகர் பிரதேசத்தில் இன்று நண்பகல் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் தலையீட்டை அடுத்து நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அளுத்கமவில் இன்று அதிகாலை ஏற்பட்டது தீ விபத்தல்ல. அது நாசகார சக்திகளின் நடவடிக்கையே என்று குறிப்பிட்டு தர்ஹா நகரில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்றுஏற்பட்டது. அந்த நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இங்கு விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும்குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் அளுத்கம மத்துகம வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அளுத்கம மத்துகம வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அளுத்கமவில் இன்று காலை இரண்டு மாடிக்கட்டிட கடை தீ விபத்தினால் எரிந்து நாசமாகவில்லை என்றும் அக்கடைக்கு தீமூட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முஸ்லிம்கள், ஜும்மா தொழுகைக்கு பின்னர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்தே அங்குபதற்றம் நிலவியது. என்றாலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளதால் நிலமை இங்கு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment