சற்று முன்னர் தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகர சபையின் தம்புள்ளை நகர பணிப்பாளர் ஏக்கநாயக்கவுக்குமிடையில்
மிடையில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பள்ளிவாசலை மீள நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபைியனால் 4 இடங்கள் முன்மொழியப்படவுள்ளதாகவும் அவற்றில் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தெரிவு செய்யப்படும் இடத்தில் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படும் எனவும் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் மாத்தளை மேயர் ஹில்மி கரீம், தம்புள்ளை மாநகர மேயர் ஜாலிய ஓபத்த ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இருப்பினும் இப் பள்ளிவாசலை அரசாங்கத்தினால் நிர்மாணிப்பது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை எனத் தெரியவருகிறது.
தம்புள்ளை பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வீதி அபிவிருத்திப் பணிகளின் பொருட்டு தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் பள்ளிவாசலின் சில பகுதிகளை தகர்ப்பதற்கு முயற்சித்த போது அங்கு பதற்றமான சூழல் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment