நயன்தாராவுக்கு ஒரு கோடி கொடுத்த சிம்பு, காரணம் என்ன?



யன்தாரா – சிம்பு மீண்டும் ஜோடி சேர்ந்த படம் “இது நம்ம ஆளு”. ஆனால் இந்த படம் சில காரணங்களால் தடைப்பட்டு போனது. தற்போது சிம்புவின் முயற்சியால் மீண்டும் இந்த படம் தொடர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிம்புவுடன் “இது நம்ம ஆளு” படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு 2 கோடி (இந்திய ரூபாய்) சம்பளம் பேசப்பட்டது. 1 கோடியை பெற்றுக்கொண்டு நடிக்க தொடங்கிய நயன்தாரா மீதித்தொகையை கொடுத்தால் மட்டுமே அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு வருவதாக கூறிவிட்டதால் படம் திடீரென தடைபட்டது.

திடீரென 1 கோடியைத் தருவதற்கு தயாரிப்பாளரால் முடியாததால், இந்த படம் கைவிடும் நிலைக்கு வந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் எந்தக்காரணத்தைக் கொண்டும் தடைபடக்கூடாது என்ற காரணத்தால் சிம்புவே நயன்தாராவுக்கு தரவேண்டிய தொகையை கடனாக தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

பணத்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மிகவிரைவில் சென்னை மற்றும் பெங்களூரில் படப்பிடிப்பு தொடர உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம் படம் வெளியாகும் என்றும் இயக்குனர் பாண்டிராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :