எல்லைப்புற கிராமங்களின் ஆலயங்களை பாதுகாப்பதிலேயே எமது மதத்தின் இனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும்


(த.நவோஜ் 

எல்லைப்புற கிராமங்களின் ஆலயங்களை பாதுகாப்பதிலேயே எமது மதத்தின் இனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசங்களின் எல்லைப்புற ஆலயங்களுக்கு சென்று அங்கு அவ்வாலயங்களின் நிலை பற்றி ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!

இன்று எமது நாட்டில் எமது இனம் மாத்திரம் முடக்கப்படவில்லை. எமது கலை கலாச்சாரம் பாரம்பரியம் என எமது அடையாளங்கள் ஒவ்வொன்றாக பறிபோகக் கூடிய சூழ்நிலைதான் இந்நாட்டில் இருக்கின்றது.

கடந்த காலத்தில் நேரடியாக எமது இனத்தின் மீது அடக்குமுறையை பிரயோகித்தவர்கள் இன்றும் அதனையே மறைமுகமாக எமது அடையாள அழிப்பு மூலம் மேற்கொள்கின்றனர். அதுவும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த மட்டில் இவ்வாறான செயற்பாடுகள்
அதிகளவில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.


திட்டமிட்ட காணி அபகரிப்புகள் திட்டமிட்ட குடியேற்றங்கள் அத்துடன் எமது
ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாது எமது தமிழர் பிரதேசங்களில் திடீர் திடிரென பௌத்த விகாரைகள் முளைக்கின்றன. இவ்வாறு பல செயற்பாடுகள் எமது இனத்தினை முடக்குவதற்கு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இவ்வாறான செயற்பாடுகளில் அதிகம் பாதிப்புறுவது எமது மாவட்டத்தில் எல்லைப்புற கிராமங்களே. இங்கு நடைபெறுகின்ற திட்டமிட்ட குடிப்பரம்பல் மூலம் எமது மத சின்னங்களும், மாற்றமுறும் நிலை தோன்றுகின்றது. ஒரு இனத்தின் அடையாளங்கள் மாற்றப்படுகின்றபோது அந்த இனத்தின் வரலாறும் மாற்றமுறும். எமது வரலாற்றினை மாற்றுவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விடயங்களில் எமது மாவட்ட எல்லைப்புற கிராம ஆலயங்களின் நிர்வாகத்தினர் மிக்க
கவனமாக இருக்க வேண்டும்.

எமது இனத்தின் மதத்தின் பாரம்பரியமும் வரலாறும் கலாச்சாரங்களை இன்னமும் பேணிக் காப்பதில் கூடிய பங்கு செலுத்துவது இவ்வாறான கிராமப்புற ஆலயங்களே எல்லைப்புற கிரமங்களில் இருக்கும் ஆலயங்களைப் பாதுகாப்பதிலேயே எமது மதத்தின் இனத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க முடியும். இவற்றினைப் பேணிக்காப்பது எம்
அனைவரது தலையாய கடமை.


நாம் ஆலயத்தில் அரசியல் பேசவில்லை. ஆனால் தற்போது இந்த அரசாங்கம்
மதங்களினூடாகவே தமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றது. எனவே நாங்களும் இங்கு அரசியல் பேசும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். எங்கோ இருக்கும் தென்ஆபிரிக்கா எமது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளை அழைத்து பேச்சுவார்த்த மேற்கொள்கின்றது.

அதுவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் சமநிலை வகித்த நாடு அதுவே எமது தமிழர் பிரச்சனை தொடர்பிலான ஒரு பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளும் போது இந்த அரசாங்கத்தினால் எமக்கான ஒரு தீர்வை மேற்கொள்வதற்கு பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது.


எமது மக்களின் சுயநிர்ணய உரிமைகளை அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் போராடிவருகின்றது. எனவே இதற்கு எமது சின்னங்களை நாம் முதலில் பலப்படுத்த வேண்டும். எமது கலை கலாச்சார அடையாளங்களை நாம் பேணிக்காக்க வேண்டும் இவற்றையெல்லாம் சிந்தித்து எமது மக்கள் செயற்படவேண்டும் இதன் மூலமே எமது இலட்சியத்தினை நாம் அடைய முடியும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :