வெலிகம அறபா தேசிய பாடசாலையின் 125ஆவது பூர்த்தி விழா :மே மாதம்


எம். எப். மொஹமட்,ஏ. இக்பால்

வெலிகம அறபா தேசிய பாடசாலையின் 125ஆவது பூர்த்தி விழா எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை 05 நாட்களை உள்ளடக்கிய விழாவாக அதி விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. 

1888ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இலங்கையின் மூன்றாவது முஸ்லிம் பாடசாலையாக கருதப்படுகிறது. தென் மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் மாணவர், மாணவிகளுக்கான விடுதிகள் காணப்படுகின்ற, கா.பொ.த. உயர்தர விஞ்ஞான / கணித / தொழில்நுட்பப் பிரிவு உட்பட ஆங்கில மொழிப் பிரிவையும் உள்ளடக்கிய ஒரேயொரு பாடசாலை இதுவாகும். 
அறபா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பரிசளிப்பு,கண்காட்சி, கடைத்தொகுதி, வினோத அம்சங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. பாடசாலை மாணவர்கள் உட்பட பெற்றோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இவ்விழாவினை கண்டுகளிக்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

பாடசாலை மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணியிலிருந்தும், ஏனையோருக்கு மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இக்கண்காட்சியினை பார்வையிட முடியும். பாடசாலை பிள்ளைகளின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கண்காட்சி கூடங்களும், அரச தனியார் நிறுவனங்களின் கண்காட்சிக் கூடங்களும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

நுழைவுச்சீட்டுக்களை தினமும் நுழைவாயிலில் பெற்றுக் கொள்ள 
முடியுமென்றும், இந்த அருச்சந்தர்ப்பத்தை தவறிடாது கண்காட்சியினை பார்வையிட வருகை தருமாறு கல்லூரி ஏற்பாட்டுக்குழவினர் அனைவரையும் வேண்டிக்கொள்கிறார்கள்.

இவ்வைபவத்தையொட்டி நடைபெறும் 'அறபியன் பாதயாத்திரை' (யுசயகயைn றுயடம) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.04.2014) காலை 7.30 இற்கு 
அறபாவிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இப்பாதயாத்திரையிலும் 125ஆம் 
வருட பூர்த்தி விழா வைபவங்களிலும் கலந்து சிறப்பிக்குமாறு அறபாவின் 
பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரும் 
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 125ஆம் வருட பூர்த்தியை முன்னிட்டு முதல் நாள் கடித உறையும் முத்திரையும் வெளியடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :