நிறைவான இல்லம் வளமான தாயகம் பாலமுனையில் நடமாடும் சேவை.






சியாத் எம் இஸ்மாயில்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிராம மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவை பாலமுனை அல்- ஹிதாயா பாடசாலையில் உதவி பிரதேச செயலாளர் எஸ் ஜெயரூபன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம்இ வீடமைப்பு நிர்மாணம் மின்சாரம் மற்றும் கிராமிய நீர் வழங்கல் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெவ்வை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதேச சபை உறுப்பினர் பாரீன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர். 

இதன் போது பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு உரிய திணைக்களங்களின் ஊடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதோடு கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரதேச அபிவிருத்தி திட்டங்களும் இங்கு இணங்காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவும் உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :