டெல்லியுடன் நாளை மோதல் - சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுமா?

.பி.எல். கோப்பையை 2 முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 6 விக்கெட்டில் தோற்றது. சென்னை அணி 2–வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை நாளை (திங்கட்கிழமை) எதிர்கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது வெற்றி கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் பலம் பெற்று இருந்தும் மோசமான பந்து வீச்சு அந்த அணியின் பாதிப்பாக இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக 200 ரன்னுக்கு மேல் குவித்தும் வெற்றி பெற இயலாமல் போனது ஏமாற்றமே.

தொடக்க வீரர்கள் மேக்குல்லம், சுமித்தின் அதிரடியான ஆட்டம் அணியின் பேட்டிங் பலத்தை காட்டுகிறது. கேப்டன் டோனி, ரெய்னா ஆகியோரும் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆவார்கள்.

தோள்பட்டையில் காயம் அடைந்த பிராவோ நாளைய ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரிய வில்லை. சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனத்தை காட்டுகிறது.

டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் எளிதில் சரண்டர் ஆனது. நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

அந்த அணியில் டுமினி, ரோஸ் டெய்லர், குயின்டன் காக், மனோஜ் திவாரி, தினேஷ் கார்த்திக், முரளிவிஜய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். காயம் காரணமாக கடந்த 2 போட்டியில் விளையாடாத பீட்டர்சன் நாளை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஆடமுடியாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கே கேப்டனாக இருப்பார். சென்னை அணிக்கு எல்லா வகையிலும் டெல்லி சவால் கொடுக்க கூடியதாகும்.

வீரர்கள் இரு அணி வீரர்கள் விவரம்:–

சென்னை: டோனி (கேப்டன்), சுமித், மேக்குல்லம், ரெய்னா, பிராவோ, டுபெலிசிஸ், ஜடேஜா, அஸ்வின், நெகி, நெக்ரா, மொகித்சர்மா, சாமுவேல் பத்ரி, மிதுன் மனாஸ், ஈஷ்வர் பாண்டே, மேட் ஹென்றி, ஹாஸ்டிங்ஸ், ஹில்பெனாஸ், ரோனித் மோர், பாபா அபராஜித்.

டெல்லி: பீட்டர்சன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், முரளிவிஜய், அகர்வால், ரோஸ் டெய்லர், டுமினி, ஜிம்மி நீசம், கோல்ட்டர் நைல், முகமது ஷமி, மனோஜ் திவாரி, ஜெய்தேவ் உன்கட், நதீம், குயின்டன் காக், சித்தார்த் கவூல், மிலிந்த்குமார், பர்னல், ஷரத், லட்சுமி, ரத்தன் சுக்லா, சவுரப் திவாரி, ஜெயந்த் யாதவ், ராகுல் சுக்லா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :