பழி வாங்கிய நயன்தாரா : நயன்தாரா மீது பட அதிபர் பாய்ச்சல் - பட உலகில் பரபரப்பு

யன்தாரா மீது அனாமிகா படக்குழுவினர் ஆத்திரத்தில் உள்ளனர். இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஒடிய ‘கஹானி’ படமே தெலுங்கில் ‘அனாமிகா’ பெயரில் தயாராகியுள்ளது. வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார். சேகர் கம்முலு இயக்கியுள்ளார்.

இந்த படம் தமிழிலும் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் வர இருக்கிறது. ‘அனாமிகா’ தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் தவறாது பங்கேற்கும்படி நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் அழைப்பு விடுத்து இருந்தனர்.

ஆனால் விழாவுக்கு நயன்தாரா போகாமல் புறக்கணித்துவிட்டார். தயாரிப்பாளருக்கு இது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் வித்யாபாலன் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரே ‘கஹானி’ பட விழாக்களில் பங்கேற்று படத்தை விளம்பரம்படுத்தி உள்ளார். ஆனால் நயன்தாரா வராமல் தவிர்த்தது தவறு என பட அதிபர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த வைபவ் மற்றும் இதர தெலுங்கு, நடிகர், நடிகைகள் பலரும் இந்த விழாவில் பங்கேற்று பேசினர். நயன்தாரா வராததால் டைரக்டரும் அதிருப்தியில் இருந்தார். தமிழ் திரையுலகில் பாடல் வெளியீட்டு விழாக்களை புறக்கணிக்கும் நடிகைகள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையை தெலுங்கிலும் கொண்டு வரலாமா என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்களாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :