புடையன் பாம்பை கொன்றவரை கொன்று பழிதீர்த்த பெண் புடையன் - மாத்தறையில் சம்பவம்

ண் புடையன் பாம்பொன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி கொத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று 24-04-2014 மாத்தளையில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை உக்குவரை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ்விடத்திற்கு வந்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

இவரது மரண விசாரணையில் மேற்படி நபர் மதுபோதையில் இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒரு சோடி புடையன் பாம்பை வேறுபடுத்தி தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்மை அடித்துக் கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் பாம்பு அவரை விரட்டி விரட்டி கொத்தியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :