நாட்டில் மிக மோசமான நிலையை பொதுபல சேனா உருவாக்கியுள்ளது - ரிஷாத் பதியுதீன்



மிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டு வர பொதுபல சேனா அமைப்பினர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் பின்னர் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமென்றும், அச்சமின்றி தொழில் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்றும் மக்கள் நம்பியிருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோசமான நிலையை பொதுபல சேனா அமைப்பு உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிறுபான்மையினரின் அடையாளங்களையும் மதங்களையும் அழிப்பதுடன் சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை. இது ஒரு பெளத்த நாடு என்று தெரிவித்து வந்த பொதுபல சேனா அமைப்பினர் இப்பொழுது அவர்களது இனத்துடனேயே மோதுகின்ற நிலை உருவாகியுள்ளது. அண்மையில் இவர்கள் பெளத்த பிக்கு ஒருவரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது.

தாங்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றுவோம் என்று அண்மையில் இந்த அமைப்பு சூளுரைத்துள்ளது. பெளத்த மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் வெல்ல முடியுமா? என்றும் இவர்கள் ஜனாதிபதிக்கே சவால் விடும் நிலைக்குச் சென்றுள்ளனர். அதே போல் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும் செயல்படுவார்கள்.

தாங்கள் எதனைச் செய்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற வகையில் தான் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பெளத்தர்கள் அனைவரும் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக மாற வேண்டும் என்று இந்த அமைப்பு தெரிவித்தது.

சிறுபான்மை இனத்தவரை அடக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதின் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :