இக்பால் அலி-
மத்திய மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யபட்டுள்ளது என்பது மட்டுமல்ல அப்பாடசாலைகளின் கல்வி மட்டமும் உயர்வடைந்துள்ளதாக என்று மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கண்டி ஹெந்தஸ்ஸ அரபா மகா வித்தியாலயத்தில் 65 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழாவும் இம்முறை வெளியான க. பொ. த. சாதாரணப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ திறமைச் சித்தி எய்தி மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம். எச். எஸ். பாயிஷh உம்மா தலைமையில் 19-04-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
மத்திய மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் 11 தேசிய பாடசாலைகள் உட்பட 109 பாடசாலைகள் உள்ளன.
இப்பாடசாலைகள் கடந்த காலங்களிலிருந்து அபிவிருத்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த அபிவிருத்தி கட்டிடத்தின் மூலம் வரையறை செய்ய வில்லை. கட்டிடம் கட்டி அதற்குப் பெயர் வைத்தால் எல்லாம் சரி என்பது இல்லை. அது அவ்வாறு இல்லை. கட்டடம் கட்டி பௌதீக வளங்களை வழங்குவது போல அந்தப் பாடசாலை மாணவர்களுக்கு கல்வியை வழங்வதே பிரதான நோக்கமாக இருத்தல் வேண்டும். கல்வியை மேம்படுத்துவதற்காக கதைக்கலாம்.
ஆனால் அது தொடர்பாக நிகழ்ச்சித் திட்டம் வகுத்துச் செயற்படுத்த வேண்டும். செயற் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போதுதான் பாடசாலை மாணவர்களின் கல்வி உயர் நிலை அடையும். அதற்காக மத்திய மாகாணத்தல் நெநோதா என்ற கல்வி திட்டம் ஒன்றை ஏற்படுத்தி செயற்படுத்தி வருகின்றோம். இதில் சிங்கள. முஸ்லிம், தமிழ் பாகுபாடின்றி கல்விக்காக உழைத்து வருகின்றோம்.
கடந்த காலங்களில் நாட்டில் வரட்சி நிலை ஏற்பாட்டால் மின்சாரம் தடைப்படும். இந்நாடு இருளில் மூழ்கியிருக்கும் ஆனால் இவ்வரசாங்கத்தின் மூலம் எவ்வாறான வரட்சி நிலை தோன்றினாலும் மின்சார வசதிகளை வழங்கி வருகின்ற ஒரு நாடு இது. நூற்றுக்கு 85 விகிதமான அளவு மின்சாரம் தடைப்படாமல் மின்சாரம் விநியோகம் நடைபெற்றுக் கொணடிருக்கிறது அது போல பாதை அபிவிருத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் ஏசிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவது போன்று கல்வி அபிவிருத்தியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படுகின்றன.
உடுநுவர பிரதேசத்தில் இரு முஸ்லிம் பாடசாலைகள் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் கவர்ச்சிகரமான நகரப் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றி அந்ததந்த கிராமத்திலேயே சிறந்த கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக முதல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். எம். எம். மர்ஜான் உரை நிகழ்த்துகையில்
உடுநுவரப் பிரதேசத்தில் தொன்று தொட்டு சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் மிக அந்நியொன்னியமாக வாழ்ந்து வருகின்றனர் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். எம். எம். மர்ஜான் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கண்டி மாவட்டத்தில் அரபா முஸ்லிம் மகா வித்தியாலயம் கல்வி வளர்ச்சியில் ஒரு மகோன்னத நிலையை அடைந்துள்ளது.
உடுநுவரப் பிரதேசத்தில் தொன்று தொட்டு சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் மிக அந்நியொன்னியமாக வாழ்ந்து வருகின்றனர் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். எம். எம். மர்ஜான் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கண்டி மாவட்டத்தில் அரபா முஸ்லிம் மகா வித்தியாலயம் கல்வி வளர்ச்சியில் ஒரு மகோன்னத நிலையை அடைந்துள்ளது.
இப்பாடசாலையிலிருந்து கல்வி கற்றமாணவர்கள் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட இன்னும் பலர் ஏனைய பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
எனவே இப்பாடசாலை எமது பிரதேசத்தின் மிக முக்கியத்துவம் வாய்த சொத்தாகும். இதனை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்த்து கட்டி எழுப்ப வேண்டும். இப்பாடசாலையில் தற்போது பெரும் குறைபாடாக விளையாட்டு மைதானம் செப்பனிப்படாமை மற்றும் ஒரு சில ஆசிரியர் பற்றாக்குறை உள்ளன. இந்தப் பாடசாலைக்கு முதல் அமைச்சர் தொடர்ந்து பங்களிப்பு நல்குவது போன்று இந்த விளையாட்டு மைதானத்தையும் ஆசிரியர் பற்றாக் குறையையும் நிவர்த்தி செய்து தருமாறு முதல் அமைச்சரிடம்அவர் மேலும் அங்கு வேண்டுகோளை முன்வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment