மாயமன மலேசிய விமானம் பற்றிய திடுக்கிடும் புதிய தகவலால் பரபரப்பு



டந்த மாதம் 8 ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பீஜிங்கிற்குப் புறப்பட்ட மலேசிய விமானம் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ராடாரிலிருந்து மறைந்தது. ஐந்து வாரங்கள் கடந்த நிலையில் இன்னமும் விமானம் குறித்தோ அதிலிருந்த கருப்புப் பெட்டி குறித்தோ எந்தத் தகவலும் தெரியவில்லை. 

இதுவரை நடைபெற்ற விமானத் தேடல்களிலேயே செலவு மிகுந்ததாக இது அமைந்துள்ளபோதிலும் நம்பிக்கை இழக்காமல் இன்னும் தேடுதல் முயற்சியில் ஆஸ்திரேலியா தலைமையில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

தெற்கு இந்தியப் பெருங்கடலின் ஆழ்பகுதியில் கேட்ட சிக்னல், நம்பிக்கை தருவதாககக் குறிப்பிட்டு வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் அவற்றின் சப்தம் குறைந்து வருவதாக நேற்று குறிப்பிட்டுள்ளார். இந்த சமிக்ஞைகளால் தோராயமாக கருப்புப் பெட்டி இருக்குமிடத்தைக் குறிப்பிட்டு வந்த அதிகாரிகள், வியாழனன்று கிடைத்த சிக்னல் மலேசிய விமானத்திலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.

30 நாட்கள் மட்டுமே ஆயுளைக் கொண்டிருக்கும் கறுப்புப் பெட்டியின் பேட்டரி பயனற்றதாக மாறியிருக்கக்கூடும் என்ற அச்சமும் தேடலைத் துரிதப்படுத்தியுள்ளது. தேடல் பகுதியை குறைத்தபின் நீருக்கடியில் ஆளில்லா ரோபோ கருவியின் உதவியுடன் கறுப்புப் பெட்டியை மீட்கும் திட்டம் அதிகாரிகள்வசம் உள்ளது. எனினும் கடந்த 24 மணி நேரமாக எந்த உறுதியான ஒலி கண்டுபிடிப்பும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விமானம் மறைந்தது தெரிந்த குழப்பமான நேரங்களிலேயே உடனே தேடுதல் முயற்சியைத் தொடங்காதது குறித்து தீர்மானிக்க சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் ராணுவ அதிகாரிகள்மீதான விசாரணையை மலேசிய அரசாங்கம் தொடங்கியுள்ளது.

மலேசியாவிலிருந்து கடந்த மாதம் 8 - ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென்று மாயமானது. இதன்பின்னர் நடைபெற்ற தேடுதல் விசாரணையில் விமானம் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. கறுப்பு பெட்டியில் இருந்து சமிக்ஞை கிடைத்திருப்பதாக கூறி, அந்த பகுதியில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்விமானம் குறித்த புது தகவலை மலேசிய பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து விடுபடும் முன், அதாவது பெனாங் தீவிற்கு அருகே விமானத்தின் துணை விமானியான பரிக் அப்துல் ஹமித், தனது செல்போனில் இருந்து ஒரு எண்ணுக்கு டயல் செய்ததும், அது உடனடியாக நின்றுவிட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானியின் செல்போன் அழைப்பு குறித்து செல்போன் கோபுரத்தில் பதிவாகியுள்ளது. ஆனால் அத்தொடர்பு ஏன் உடனடியாக துண்டிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை விமானம் வேகமாக இயங்கியதால், சிக்னல் கிடைக்காமல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மலேசிய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

விமானியின் செல்போன் அழைப்பு தகவல்களை ஆராய்ந்த போது அந்த அழைப்பு, அடிக்கடி அவர் பேசும் எண்ணுக்கு தொடர்பு கொண்டது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :