அபரிவிதமான ஆசையினால் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி - மட்டக்களப்பில் சம்பவம்



- நௌசாத் முகம்மட் -

ரண்டு மாணவிகளுக்கிடையில் இடம் பெற்ற புரிந்துணர்வற்ற நகைச்சுவை உரையாடல் இருவரும் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு மாறியுள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 

இரண்டு பேரில் ஒருவரின் முகம் வெள்ளையாக மாறிவருவதனை அவதானித்து வந்த மற்றய மாணவி நகைச்சுவையாக பலபேர்களுக்கு மத்தியில் கிறீம் பூசியதனாலேயே அவளின் முகம் வெள்ளையாக உள்ளது எனக் கூறியுள்ளார். 

இதனை அவமானம் எனக்கருதிய அம் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக நஞ்சருந்தி இருந்தார்.  இதனை கேள்வியுற்ற மற்றைய மாணவி பயத்தின் காரணமாக தனக்கு ஆபத்து வரக்கூடும் எனக் கருதி தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் வீட்டுக்குள் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.

 தூக்கில் தொங்கிய மாணவியினை அவரின் சாகோதரன் வீட்டின் ஓட்டை உடைத்து உள்சென்று தொங்கிய மாணவியினை காப்பற்றியுள்ளார் நஞ்சருந்திய மாணவியை அவரின் உறவினர்கள் இனங்கண்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர் இவர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவை சம்மந்தமான மேலதிக விசாரணைகள் ஏறாவூர் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :