யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தினருடன் இணைந்து நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு

த.நவோஜ்-
செங்கலடி அக்னி இசைக்குழுவின் 14வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும், சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாகவும், யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தினருடன் இணைந்து நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அக்னி இசைக்குழுவின் தலைவர் எஸ்.ரகு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக செங்கலடி செல்லம் பிறிமியர் உரிமையாளர் க.மோகன், மத தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு கிரிக்கெட் சுற்றுப் போட்டி, ஆண், பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல், பெண்களுக்கான மட்டை இழைத்தல், தேங்காய் திருவுதல், தொப்பி மாற்றுதல், சிறுவர்களுக்கான சாக்கு ஓட்டம், எலி ஓட்டம், மிட்டாய் ஓட்டம், பெரியவர்களுக்கான மாவுக்குள் காசு எடுத்தல், குளிர்பானம் அருந்துதல், ஆண்களுக்கான முட்டி உடைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், பெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது கலைத்துறை ஹபாயின், கிட்டார் வாத்திய கலைஞர் க.சடாச்சரம், தாளவாத்தியம், பாடகர், அறிவிப்பாளர் அ.நேசதுரை பாடகர், அறிவிப்பாளர், எஸ்.பிரபாகரன், வாத்தியத்துறை ஒக்டோபட் எஸ்.ஜெயானந், கலைத்துறை பாடகி வி.வசந்தகுமார் ஆகியோர் விருதுகள் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :