பொது­ பல சேனாவை கட்­டுப்­ப­டுத்­­தா­து அர­சாங்கம் வேடிக்கை பார்ப்­பது ஏன் - ரில்வின் சில்­வா



ன­நா­ய­கத்­திற்கு எதி­ராக தீவி­ர­மாக செயற்­படும் பொது பல சேனா பௌத்த அமைப்பை கட்­டுப்­ப­டுத்­தாது அர­சாங்கம் வேடிக்கை பார்ப்­பது ஏன் என கேள்வி எழுப்­பிய ஜே.வி.பி. யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா சிறு­பான்மை மக்­களை அடக்க உரு­வாக்­கப்­பட்ட இயக்­கமே பொது பல சேனா எனவும் குற்றம் சுமத்­தினார்.

பொது பல சேனா பௌத்த அமைப்­பினை தொடர்ந்தும் செயற்­பட விட்டால் எதிர்­கா­லத்தில் மோச­மான விளை­வு­களை எதிர்­நோக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரி­வித்தார்.

அண்மைக் கால­மாக பொது பல சேனா அமைப்பின் மோச­மான செயற்­பா­டுகள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டில் ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரா­கவே தொடர்ந்தும் பொது பல சேனா அமைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது. தமது நியா­ய­மற்ற கருத்­துக்­களைக் கொண்டு சிறு­பான்மை மக்­களை அடக்கி தமது காட்­டு­மி­ராண்டித் தன­மான செயற்­பா­டு­களை செய்து வரு­கின்­றது. ஆனால் அர­சாங்கம் இது­வ­ரையில் பொது பல சேனா­விற்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­காது வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்தின் பலத்தை பெற்­றுக்­கொண்டே இவர்கள் கட்­டுப்­பா­டின்றி செயற்­ப­டு­கின்­றனர். சிறு­பான்மை முஸ்லிம் கிறிஸ்­தவ மக்­களை குறி வைத்து அவர்­களை அடக்­கு­வ­தற்­கான பௌத்த வேட­மிட்டு செயற்­படும் தீவி­ர­வாத இயக்­கமே இவ் பொது­பல சேனா. இவர்­களின் காட்டு மிராண்­டித்­த­ன­மான செயற்­பா­டு­களை இப்­போ­தா­வது கட்­டுப்­ப­டுத்­தா­விடின் எதிர்­கா­லத்தில் மிக மோச­மான விளை­வு­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும்.

மேலும் சட்­டத்­தையும் நீதி­யையும் தனி­யொரு நபரோ அல்­லது அமைப்போ கையில் எடுக்க முடி­யாது. அவ்­வாறு செயற்­பட்டால் அவர்­களை கடு­மை­யாக தண்­டிக்கும் அதி­காரம் அர­சாங்­கத்­திற்கு உண்டு. ஆனால் எமது நாட்டில் அனைத்­துமே தலை­கீ­ழாக இடம் பெறு­கின்­றது. பௌத்த அமைப்பு என்­ப­தற்­காக அவர்கள் நாட்டை ஆள்­ப­வர்­க­ளல்ல. பௌத்த மதத்­திற்கும் இனத்­திற்கும் எவ்­வாறு உரி­மைகள் வழங்­கப்­பட்­டுள்­ளதோ அதே உரிமை ஏனைய மதத்­த­வ­ருக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதை துஷ்­பி­ர­யோகம் செய்யும் அதி­காரம் எந்­த­வொரு மதத்­த­வ­ருக்கும் இல்லை.

நாட்டில் இன்று மிக மோச­மான தீவி­ர­வாதம் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. காவி உடை­யை அணிந்து கொண்டு அர­சாங்­கத்தின் அடியாள் வேலையினை பொது பல சேனா அமைப்பு செய்து வருகின்றது. எனவே இதனை உடனடியாக அரசாங்கம் கவனிக்காவிடின் சிறுபான்மை மக்களுக்கெதிரான அடக்கு முறை வலுவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :