அமைச்சர் அதாவுல்லாவுக்கு உதுமான்கண்டு நாபீரின் பகிரங்க மடலும் பகிரங்க சவாலும்...!!!

அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களே..!! 

ண்மையில் எமதூரான சம்மாந்துறையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நீங்கள் உரையாற்றும் பொழுது சம்மாந்துரைப் பிரதே சபையை இரண்டு உள்ளூராட்சி மன்ற சபைகளாக பிரித்து பின்னர் நகர சபை ஒன்றை ஏற்ப்படுத்தத் திட்டமிட்டு உள்ளேன் ஆனால் இதுவரை உங்கள் ஊரைச்சேர்ந்த எவரும் இதுபற்றி என்னிடம் எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்று கூறியிருந்தீர்கள்.

நான் உங்களிடம் கேட்குகின்றேன் இதுவரையில் உங்களால் மறந்துவிடப்பட்ட எமது ஊர் அபிவிருத்தி சம்பந்தமான சிந்தனைகள் உங்களுக்கு இப்போது தோன்றி இருப்பதற்கான காரணங்கள்தான் என்னவோ? கடந்த தேர்தலில் சம்மாந்துறை தொகுதியில் இருந்து பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு அதாவது நீங்கள் சார்ந்த கட்சிக்கு 28252 இற்கு மேற்ப்பட்ட வாக்குகளை அளித்த எமது சம்மாந்துறைப் பிரதேச மக்களுக்கு நீங்கள் செய்த நன்றிக்கடன்தான் என்ன? அவர்கள் உங்களிடம் வலியவந்து கோரிக்கை விடுத்தால்தானா நீங்கள் செய்வீர்கள்? இல்லாவிட்டால் எதுவுமே நடக்காதா?

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஏனைய மூன்று தொகுதிகளை விட அதிகப்படியான விருப்பு வாக்குகளை உங்களுக்கு வழங்கிய தொகுதிதான் சம்மாந்துறை தேர்தல் தொகுதி அதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

சம்மாந்துரைப்பிரதேசத்தை இரண்டு உள்ளூராட்சி சபைகளாக பிரித்து நகர சபையாக மாற்றத் திட்டமிட்டுளேன் என்று குறிப்பிட்டீர்கள் ஏன் இப்படி சம்மாந்துறையை பிரித்து பிரதேச பாகுபாடு ஏற்ப்படுத்துவதற்கு வழிசமைக்கின்றீர்? அப்படி அல்லாமல் சம்மாந்துறையை ஒரு மாநகர சபையாக மாற்ற முயற்சி செய்யுங்கள் அதுதான் எமது சம்மந்துரையின் இன்றைய தேவையாகும்.

அமைச்சர் அவர்களே எனது பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் கூறமுடியுமா?

௦1. அக்கரைப்பற்றை உங்களது சொந்த முயற்ச்சியால் மாநகர சபையாக தர உயர்த்த உங்களால் முடியுமென்றால் ஏன் நிலபரப்பில் பெரிய செல்வம் கொளிக்கக்கூடிய எமது சம்மாந்துறைப் பிரதேசத்தை மாநகர சபையாக தரமுயர்த்த முடியாது.? இதற்க்கான முட்டுக்கட்டைகள்தான் என்ன?

௦2. எமது சம்மாந்துறைப் பிரதேசமக்கள் தங்களது காணிகளுக்காக வழங்கப்பட்ட போர்மிட் பத்திரங்களை உறுதியாக மாற்ற திண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களது கவலையை உங்களால் போக்கி அவர்களுக்கு உறுதி வழங்கி வைக்கமுடியுமா?

௦3.உங்களாலும் உங்களது கட்சியை சேர்ந்த உறுப்பினர்களாலும் எமது சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு இதுவரையில் கிடைத்த அபிவிருத்திப்பணிகள் தான் என்ன?

அமைச்சர் அவர்களே !! சம்மாந்துறை பிரதேசமானது இலங்கையின் கல்வி கலாச்சார விழுமியங்கள் பேணப்படும் ஒரு கட்டுக்கோப்பு மிக்க பிரதேசமாகும். பிரதேச அபிவிருத்தி என்பது தற்காலத்தில் பின்னடைந்து காணப்படுவதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எமது சம்மாந்துறைப் பிரதேச அபிவிருத்தி என்பது இன்றைய காலத்தின் தேவையாகும் சாட்டுப்போக்குகளை சொல்லி விலகிவிடுவதை விட எமது பிரதேச மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளையும் அபிவிருத்திகளையும் செய்வது மேல்.

எமது சம்மாந்துறைப் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க அரசியல் கட்சி பேதங்கள் மறந்து அனைவரும் முன்வரவேண்டும் வெறும் பிரதேச வாதங்களைப் பேசிக்கொண்டு இருப்பதில் எந்த ஒரு அபிவிருத்தியையும் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி இருந்தீர்கள் உங்களது கருத்தை நான் வரவேர்க்குகின்றேன் அதே சமயம் உங்களுக்கு ஒன்றை மாத்திரம் நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் அதாவது சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள் நலன் விரும்பிகள் யாரும் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் வேறுபட்டு நிற்கவில்லை அதே போலத்தான் சம்மந்துரை பிரதேச வாழ் மக்களும் தமது பிரதேசம் அபிவிருத்தியில் உச்ச நிலையினை அடையவேண்டும் என்று கனவுகாண்கின்றனர் அந்த கனவு நனவாகும் நாள் வெகு தூரமில்லை.

வேற்றுமை கடந்து ஒற்றுமையுடன் எமது சம்மாந்துறைப் பிரதேசத்தை மக்களுடன் மக்களாக தோள் கொடுத்து அபிவிருத்தியின் உச்சத்துக்கு கொண்டுசெல்வோம். நன்றிகள் உரித்தாகட்டும் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு.
சமாதான நீதவான்
அல்ஹாஜ் யூ.கே. நாபீர்
தலைவர் நாபீர் சமூக அபிவிருத்தி அமைப்பு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :