ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கல்முனை மாநகர பிரதேசங்களில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள “இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டை” நிகழ்ச்சித் திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
ஆசியா மன்ற நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.அமிர்தலிங்கம், ஏ.விஜயரத்னம், எஸ்.ஜெயகுமார், மாநகர சபையின் பிரதம சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோரும் ஆசியா மன்றத்தின் சார்பில் அதன் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி, பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகளான றிசாட் சரீப், சாள்ஸ் சசிகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் உள்ளூராட்ச்கி மன்றங்களில் ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைப் பிரிவில் புதிதாக நடைமுறைப்படுத்தவுள்ள eCRC (e Citizen Report Cards) எனும் ‘இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டை’ நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இது குறித்து ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி விசேட சமர்ப்பணம் ஒன்றை முன்வைத்து இத்திட்டம் தொடர்பிலான அறிவூட்டல்கள், செயற்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விளக்கிக் கூறினார்.
இதில் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினரும் கலந்து கொண்டு “இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டை” நிகழ்ச்சித் திட்டம் குறித்த தெளிவுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இத்திட்டம் ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆசியா மன்ற நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
இத்திட்டத்திர்காகென விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட 22 அதிகாரிகள் பிரதேசங்கள் தோறும் களத்தில் இறங்கி சுமார் 1800 குடும்பத் தலைவர்களை நேரடியாக சந்தித்து- கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பில் அவர்களது கருத்துகளை இலத்திரனியல் பொறிமுறை ஊடாக பதிவு செய்யவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பு: இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளை மெட்ரோ மிரரில் விரைவில் எதிர்பாருங்கள்.

0 comments :
Post a Comment