இயக்குநர் விஜய் - அமலாபால் திருமணம் வரும் ஜூன் 12ம் திகதி சென்னையில் நடக்கிறது.
அதற்கு முன் ஜூன் 7-ம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. விஜய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதத்தவர். திருமணத்துக்கு முன்பு கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விடும்படி விஜய்யை அமலா பாலும் அவரது பெற்றோரும் மென்மையாக வற்புறுத்துவதாகக் கூறப்படுகிரது.
ஆனால் தன் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி கிறிஸ்தவ மதத்துக்கு மாற விஜய் தயங்குகிறாராம். அவரவர் மதம் அப்படியே இருக்கட்டும். நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று அவர் அமலாவிடம் கூறினாலும், அதை ஏற்க தயாராக இல்லையாம்.
இது இருதரப்பிலும் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய் மாறுவாரா.. அல்லது அமலா பால் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடுவாரா?

0 comments :
Post a Comment