இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை




சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோகித்சர்மா 50 ரன்கள் எடுத்தார். சென்னை பந்து வீச்சில் அபாரமாக பந்து வீசிய மோகித்சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

இதனை அடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக பிரெண்டன் மெக்கல்லம் 71 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :