NF-
சர்வதேசரீதியாக தோன்றியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உண்மைநிலையை நன்கறிந்துள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்காக ஒருமித்து குரல் எழுப்பவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
தற்காலிக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களின் மூலம், நீதிக்காகவும், உண்மைநிலையின் பொருட்டும் இந்த நாடுகள் குரல் எழுப்புவதை சீர்குலைக்கும் முயற்சியில் ஒருசிலர் ஈடுபட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
காலி பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த கருத்துகளை கூறினார்.
முஸ்லிம் மக்களுடன் ஆரம்பம் முதலே தாம் நட்புறவுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நிகழ்காலத்தில் இருக்கின்ற அனைத்து தலைவர்களுக்கும் முன்பிருந்தே பலஸ்தீனத்தின் முன்னாள் தலைவர் யாசீர் அரபாத்தை தாம் அறிந்திருந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment