அக்கரைப்பற்று மாநகரினை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட மாநகரமாக மாற்றியமைக்கும் திட்டம்



ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-


வுஸ்திரேலிய நாட்டின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் ஹபிடாட் (UNHABITTAT) நிறுவனம் மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் அக்கரைப்பற்று மாநகரசபைக் கட்டிடத்தில் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட நகர மற்றும் நகர திட்டமிடல், நகர அபிவிருத்தி பணிகளுகக்கான அலுவலகம் ஒன்றினை நேற்று (13.03.2014) வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது.

அக்கரைப்பற்று மாநகரசபையின திட்டமிடப்பட்ட செயற்றிட்டங்களின் மற்றுமொரு அங்கமான அக்கரைப்பற்று மாநகரினை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட மாநகரமாக மாற்றியமைக்கும் மாநகரசபையின் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக இந்த அலுவலகம் இங்கு திறந்து வைக்கப்படுகிறது.

மாநகரசபையின 02வது மாடியில் அமைந்துள்ள இவ் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட நகர மற்றும் நகர திட்டமிடல், நகர அபிவிருத்திப் பிரிவு அலுவலக அங்குரார்ப்பண வைபவத்தில் அக்கரைப்பற்று மா நகர மேயா அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்களும், ஹபிடாட் நிறுவனத்தின்; அனர்த்தக் குறைப்பு நகர திட்டமிடல், நகர அபிவிருத்திக்கான திட்ட முகாமையாளர் திருமதி இந்து எஸ். வீரசூரிய, ஹபிடாட் நிறுவன செயற்றிட்ட முகாமையாளர் சமன் ஏக்க நாயக்க, திட்ட உத்தியோகத்தர் மஞ்சு விதான காமாட்சிகே மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, மாநகர பிரதி மேயர் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியடசகர் டாக்டர்ஏ.எம்.ஜஹ்பர், அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.ஐ.இஸற்.இப்றாஹீம்,சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.சித்தீக்,மாவட்ட அனர்த்த முகாமையாளர் எம்.ஸியாத், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன், உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், சமுக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதிய அலுவலகத்தை ஹபிடாட் நிறுவனத்தின்; அனர்த்தக் குறைப்பு நகர திட்டமிடல், நகர அபிவிருத்திக்கான திட்ட முகாமையாளர் திருமதி இந்து எஸ். வீரசூரிய அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி ஆகியோர் இணைந்து நாடாவை வெட்டி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.

ஹபிடாட் நிறுவன திட்ட முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட முகாமையாளர்; ஆகியோர் அனர்த்தக் குறைப்பு நகர திட்டமிடல், நகர அபிவிருத்திக்கான அலுவலக நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.
அலுவலகத்திற்கும் மற்றும் அனர்த்தக் குறைப்பு நகர, நகரதிட்டமிடல், அபிவிருத்திக்குத் தேவையான ஒரு தொகுதி உபகரணங்களையும் ஹபிடாட் திட்ட முகாமையாளர் திருமதி இந்து எஸ். வீரசூரிய மேயரிடம் வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :