JM-
பொதுபலசேனா பௌத்த அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பின் போது அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர் மீதும் தெரிவித்த கருத்துகளை துயககயெ ஆரளட நான் அ வெளியிட்டிருந்ததை படித்ததில் அதற்கான பதில் கருத்துகளை குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் சமூகப் பொறுப்புவாய்ந்த தலைவராக இருப்பதனால் நாங்கள் அவரை விமர்சிப்பதும், சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தலைமை செயற்பட வேண்டும் என்று ஆதங்கப்படுவதும் எங்களுக்கு உரித்தான ஒன்று. அது ஞானசார தேரருக்கு உரித்தானதுமல்ல அது அவருக்கு அவசியமானதுமல்ல. ரவூப் ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரஸையும் விமர்சிப்பதனால் முஸ்லிம்களை இந்த நாட்டின் விரோதிகளாக்கலாம் என்ற அர்த்தத்தில் ஞானசார தேரர் பேசுகிறார்.
இந்த நாடு பௌத்த நாடாக இருக்கலாம் ஆனால் இது சிங்களவர்களுக்கு மட்டுமான நாடு அல்ல இந்த அரசாங்கமும் சிங்களவர்களுக்கு மட்டுமான அரசாங்கமும் அல்ல. இங்கு மதச் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டும். எல்லா மதங்களும் மக்களை ஆக்குவதற்கானதே மாறாக அது மக்களை அழிப்பதற்கானது அல்ல என்பதை ஞானசார தேரர் அறிந்துகொள்ள வேண்டும்.
ஞானசார தேரரின் கருத்தில் இனவாதமும் இனச்சுத்திகரிப்பு வெறியும் வெளிப்படையாகவே தெரிகிறது. 'சிங்கள இனம் அழிக்கப்படுமாயின் நாட்டில் முஸ்லிம்கள் வாழ முடியாது' என்று அவர் எச்சரித்துள்ளார்.
சிங்கள இனத்தை அழிக்கும் செயற்பாட்டைச் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அப்படி என்ன அவசியம் இருக்கின்றது. அதற்கான எந்த தேவையும் முஸ்லிம்களுக்கு இல்லை. இதுவரையான வரலாற்றில் முஸ்லிம்கள் இது போன்ற இழிவான செயல்களை எப்போதும் செய்ததுமில்லை.
பௌத்த பேரினவாதத்தாலும் தமிழ் ஈழ யுத்தத்தினாலும் எதுவும் செய்யாது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு சமூகம் முஸ்லிம் சமூகம்தான் என்பதை ஞானசார தேரர் அறியாவிட்டாலும் சகோதர சிங்கள தமிழ் சமூகங்கள் நன்கு அறிவார்கள். இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு மத்தாளம் போல் இரண்டுபக்க அடிகளையும் தாங்கிக்கொள்கிறார்கள்.
'மக்களையும் நாட்டையும்; சீரழிக்கும் செயலை முஸ்லிம் காங்கிரஸ் செய்கிறது' என்ற ஒரு கருத்தையும் ஞானசார தேரர் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தைக் கூறும்போது அவர் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவில்லையா? இப்போது பௌத்த வாதத்தின் அடிப்படையில் முஸ்லிம் அழிப்பு விரோதத்தை முன்னெடுத்து நாட்டையும் மக்களையும்; சீரழிப்பது முஸ்லிம் காங்கிரஸா? பொதுபலசேனாவா? பழிபோடுவதற்கும் ஒரு நியாயம்; வேண்டுமே. ஞானசார தேரர் முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதனூடாக முஸ்லிம்களை இந்த நாட்டின் விரோதிகளாக்கி, முஸ்லிம்களை வேண்டுமென்றே சண்டைக்கிழுத்து அழிக்கப்பார்க்கிறார்.
முஸ்லிம் காங்கிரஸை ஒரு விபச்சாரி போல் ஞானசார தேரர் விமர்சித்திருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் பத்தினியாக இருக்கிறதோ?விபச்சாரியோடு எதற்கு கூட்டு வைத்திருக்கிறது அரசு. இந்த நாட்டின் சிறுபான்மைக் கட்சிகளின் கற்பை சூரையாடி இக்கட்சிகளை விபச்சாரிகளாக்கியது அரசுடன்; இருக்கும் சிங்களப் பேரினவாதக் கட்சிகள்தான் என்பதை புரிந்துகொள்ளாதவரா ஞானசார தேரர்.
(முடிந்தால் இதனை சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்கள ஊடகங்களிலும் பிரசுரிக்கச் செய்யலாம்)
இலங்கையிலும் மத்திய கிழக்கு நாட்டு முஸ்லிம் கொள்கைகளைப் பரப்பி இலங்கையில் கொடூரமான செயல்களை முஸ்லிம் மக்களிடையே பரப்பி இலங்கையில் அமைதியின்மையினையும் தீவிரவாதத்தினையும் பரப்பவே இவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்கின்றனர். இன்று இலங்கையில் இருந்து மத்திய கிழக்கிற்கு சென்றுள்ள சிங்கள தமிழ் பெண்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளனர். அதே போல் கிழக்கிலும் தமிழ் பெண்களை மத மாற்றம் செய்து சமூக அழிப்பினை செய்து கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் தலைமை தாங்கும் சக்தியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகின்றது.
ஞானத் தேரரின் இந்தக் கருத்து முஸ்லிம் காங்கிரஸின் மீது அல்ல இஸ்லாம் மதத்தின் மீது என்பது தெளிவாகத் தெரிகிறது. இஸ்லாத்திற்கு மதம் மாறுகின்ற நிலை மத்திய கிழக்கிற்கு வேலைக்குச் செல்கின்ற சிங்களவர்களிடத்தில் மட்டுமா நடக்கின்றது? உலகிலுள்ள பெரும்பாலான கிருஷ்த்தவர்கள் இன்று இஸ்லாத்தை தழுவிக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்கா போன்ற பெரும் நாடுகளில் இது நாளாந்தம் நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய கிழக்கிற்கு செல்கின்ற சிங்களவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் என்ன செய்ய முடியும். அவ்வாறு அதனைத் தடுக்க வேண்டுமானால் மத்திய கிழக்கிற்கு செல்கின்ற சிங்கள மக்களை பொதுபலசேனா தடுத்து நிறுத்தி அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை இலங்கையில் உருவாக்கி கொடுப்பதற்கு முயற்சிக்கலாமே! முஸ்லிம் விரோதச் செயல்களைச் செய்வதை விட்டுவிட்டு பொதுபலசேனா இவ்வாறன செயல்களைச் செய்தால் சிங்கள மக்கள் இஸ்லாத்திற்கு மதமாறுவதையாவது தடுக்கலாமே!
கிழக்கில் தமிழர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதாகக் கூறி ஆதங்கப்படும் கவலை ஞானசார தேரருக்கு அவசியமில்லாதது. மதம்மாறுவதில் மட்டும்தான் தமிழர் மீது பொதுபல சேனா பரிவு காட்டுகிறதா? வடகிழக்கை அவர்கள் தனித்துக் கேட்டால் அதைக் கொடுக்க ஞானசார தேரர் பரிவு காட்டுவாரா? அதுமாத்திரமன்றி இவற்றை எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ்தான் செய்கிறது என்று குறிப்பிடுகிறார். இதைச் செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் தப்லிக் ஜமாத் அமைப்பு அல்ல என்பதையும் ஞானசார தேரர் விளங்க வேண்டும்.
இலங்கையில் தொடர்ந்தும் சிங்கள சமூகத்தினை அழிக்கும் செயற்பாட்டினை முஸ்லிம் தீவிரவாதிகள் செய்து வருவார்களாயின் இலங்கையில் முஸ்லிம் இனத்தினருக்கும் வாழ்வது குறித்து கேள்வி ஏற்படும். இலங்கையில் மூவின சமூகங்கள் அமைதியாக வாழ வேண்டுமாயின் முஸ்லிம் தீவிரவாதக் கொள்கையினை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஞானசார தேரர் குறிப்பிடுவது போன்று முஸ்லிம் தீவிரவாதிகளோ, முஸ்லிம் தீவிரவாத அமைபுகளோ இலங்கையில் செயற்படவில்லை. அவ்வாறு இல்லாத ஒன்றை இருப்பதாக உருவாக்கி முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற பொதுபலசேனாவின் நோக்கத்தை ஞானசார தேரர் நிறைவேற்றப்பார்க்கிறார்.

ஆனால் இதுவரை பொதுபல சேனாவினால் கொண்டுவரப்பட்ட முஸ்லிம் விரோத செயல்கள் எதற்கும் எந்தவிதமான தீவிரவாத செயல்களையும் முஸ்லிம்கள் திருப்பிக்; காட்டாது இருக்கிறார்கள் அவ்; வாறான தீவிரவாத செயல்களை இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் திருப்பிக்காட்டவுமட்டார்கள் என்பதையும்; ஞானசார தேரர் உணர்; ந்திருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் எப்போதும் பிறமதங்களை மதிப்பவர்கள் மாறாக மிதிப்பவர்களோ அழிப்பவர்களோ அல்ல பௌத்தத்திலும் அதற்கு இடமிருக்காது என்று நாங்கள் அறிகிறோம் ஞானசார தேரர் அதை அறியாதவரோ. ஆனாலும் ஞானசார தேரர் ஒன்றை மட்டும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம்களை அழிப்பதனால் பௌத்தத்தை ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. அதை பௌத்த தர்மப்படி நடந்துதான் புனிதப்படுத்த முடியும் அதைத்தான் பௌத்த பிக்குகள் செய்ய வேண்டும்.

0 comments :
Post a Comment