இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 41 நாடுகள் அனுசரணையென நம்பிய – அமெரிக்கா…
வாக்கெடுப்புக்கு முன்னரே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு 41 நாடுகளின் அனுசரணை கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.
இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து விளக்கமளிக்கும் போது அமெரிக்கப் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்ந்தும் சரிவை நோக்கிச் செல்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆயினும் 47 நாடுகளில் 23 நாடுகளே ஆதரவு அளித்துள்ளது.
வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாது!..
வாக்கெடுப்புக்கு முன்னரே, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து இடம்பெறும் விவாதத்தின் போது கலந்து கொண்டு பேசிய இந்திய பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)
0 comments :
Post a Comment