அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் - அதாஉல்லா

எம்.பைஷல் இஸ்மாயில்-

இனம், மதம், நிறம் என்ற போர்வையில் வைத்தியசாலைகளை உற்றுநோக்கக் கூடாது. வைத்தியசாலை என்பது மக்களுக்கு பொதுப்பணிகள் செய்யும் இடமாகும், இந்த இடத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பது அதிகாரம் உள்ளவர்களின் பொறுப்பாகும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உள்ளக வீதி திறப்பு விழா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கல்முனைப் பிராந்தியத்தில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்பிரதேச மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பெரும் பங்களிப்பு செய்து வருவதை நாம் காண்கின்றோம். வைத்தியசாலைகள் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கான பணிகளையும், பங்களிப்புக்களையும் செய்து வருகின்றன. இந்த பங்களிப்புகளை வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களாள் மட்டும் முடியாது. என்பதயும் அதற்கு பல தேவைகள் ஏற்படும் என்பனையும் நான் அறிந்தவனாகவும் அத்தேவைகளை நிறைவேற்றி வைக்க என்னாலான பங்களிப்புகளையும் வழங்க எண்ணியுள்ளேன்.

குறிப்பாக இந்த வைத்தியசாலைக்கு மிக அவசரமான தேவையாகவுள்ள அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மிக அவசரமாக மேற்கொள்ளவுள்ளேன் என்றார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :