மஹிந்தவின் கரத்தை பலப்படுத்துவதன் மூலமே சர்வதேச சக்திகளை விரட்ட முடியும் - ஹிஸ்புல்லாஹ்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

ம் நாட்டில் பலமான அரசை வைத்துக் கொண்டு எமது பிரச்சினைகளை எமக்குள்ளே பேசி தீர்க்காது அரசுக்கெதிராக ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. 

இன்று நாம் அமையாக வாழ்ந்துகொண்டிருக்கையில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் இந்த அரசை ஒருபோதும் தூக்கியெறிய முடியாது.

இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம் எல்.. ஏ எம் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில்;.. நடைபெற்ற தொழில்நுட்ப வளாக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் கூறினார். இங்கு பிரதியமைச்சர் தொடர்ந்து பேசுகையில்

இன்று நாம் இந்த நாட்டில் அமைதியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கையில் சர்வதேச சக்திகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் தமிழர்களையும் சிங்களவர்களையும் மோதவிட்டு மீண்டும் இன மோதல்களையும் இன கலவரங்களையும் ஏற்படுத்த முனைகின்றன.இவ்வாறான தீய சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணிய கூடாது.

எமது நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. இந்த நாட்டில் மாத்திரமல்ல உலக நாடுகள் முழுவதிலும் பிரச்சினைகள் உள்ளன. அமைதியாக இருந்த ஈராக் இன்று எரிந்துகொண்டிருக்கிறது.

ஜனாதிபதி சதாம் ஹுசைன் மிகவும் அருமையான ஆட்சியை அங்கு நடத்தி வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்டு அங்கு யுத்த களமாக அந்த நாடு மாறிக்கொண்டிருக்கிறது. சுமார் நாலு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் இதுவரை அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல கோடி சொத்துக்கள் அந்நிய நாடுகளால் சூரையாடப்பட்டு வருகின்றன.

சர்வதேச ரீதியில் இலாபமடையும் சக்திகள் சிரியா லிபியா மற்றும் பல நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைந்து வருகின்றன. இதனையிட்டு நாம் மிக கவனமாக இருக்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப்பலப்படுத்துவதன் மூலம் இந்த சர்வதேச சக்திகளை விரட்டியடிக்க முனைய வேண்டும்.

எமது பிரச்சினைகளை நாமே தீரக்க வேண்டுமே தவிர அவ்வாறு அந்நிய சக்திகள் இன வாதத்தையும் மத மத வாதத்தையும் கிழப்பி இந்த நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுத்த முனைந்து வருகின்றனர்.

பல நூற்றாண்டு காலமாக சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் மிகச் சந்தேசமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் மிக அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கி முஸ்லிம்களுக்கெதிராக சர்வதேச சக்திகள் இனங்களுக்கிடையில் மோதல்களை உண்டு பண்ண முனைந்து வருகின்றன இந்த நிலைமைகளை உணர்ந்து எமது மக்களை பாதுகாப்பதற்கான வழியை மேற்கொள்ள வேண்டுமே தவிர அரசியல் ரீதியாக அனுகி அரசியல் லாபம் தேட எவரும் முனையக்கூடாது.

ஒரு காலத்தில் நாம் இப்பிரதேசத்தில் ஒரு கூட்டம் நடத்தவும் வெளியில் நடமாடவும் நிம்மதியாக உறங்கவும் முடியாமல் இருந்த பயங்கரவாத சூழலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனை மாற்றி அமைதி சூழலை இங்கு ஏற்படுத்தியுள்ளார். அன்றைய பயங்கரமான காலகட்டத்தில் இப்பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் பள்ளிவாயல்களிலும் ஆற்றில் மீன் பிடிக்கச்சென்ற வேளையிலும் சுட்டுக்கொல்லப்பட்டு ஜனாஷாக்களை எடுக்கமுடியாதிருந்த சூழல் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மாற்றப்பட்டுள்ளது.

அவரால் கொண்டுவரப்பட்ட அந்த அமைதி சமாதானத்தை பொறுக்க முடியாத சக்திகள் இந்த நாட்டில் மீண்டும் அமைதி இன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த நாட்டுக்குள் இருந்து குழப்பத்தை உண்டு பன்ன முடியாத சக்திகள் நாட்டுக்கு வெளியே இருந்து அமைதியை குலைக்க முயற்சிக்கின்றனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :