கடந்த 1972ம் ஆண்டு முதல் தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டின்முஸ்லிம் போராட்டக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் இடையே பாரிய உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வந்துள்ளதுடன் இரு தரப்பிலும் சுமார் 120 000 பேர் கொல்லப்பட்டனர்.
இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (MILF) தலைவர் அல் ஹாஜ் முராத் இப்ராஹிம் தலைமையில் பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் முன்னிலையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தென்கிழக்கு ஆசியாவில் மிக பெரிய ஆயுத குழுவாக MILF கருதப்படுகிறது. இந்த உடன் படிக்கையின் முதல் கட்டமாக 10000 முதல் 15000 போராளிகள் தமது ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இவ் ஒப்பந்த முடிவில் பேசிய அல் ஹாஜ் முராத் இப்ராஹிம், சமாதான உடன் படிக்கைக்கு தங்களை அழைத்த பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தை வரவேட்பதுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களாலான பூரண ஒத்துழைப்பையும் நல்க உள்ளதாகவும் எதிர் காலத்தில் தெற்கு பிலிப்பைன்ஸில் முஸ்லிம்களுக்கான தனிநாடு வழங்க பிலிப்பைன்ஸில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால் இந்த உடன் படிக்கையை சிறிய போராளிக்குழுக்கள் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்த உடன் படிக்கை மற்றும் சமாதான பேச்சுவார்த்தையின் முக்கிய மத்தியஸ்தராக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் முக்கிய பக்கேற்றது குறிப்பிடத்தக்கது.



0 comments :
Post a Comment