களுவாஞ்சிக்குடி வீரபத்திரர் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனைக்கு கார் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் குறுக்கிட்டதையடுத்து மேற்படி கார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.மு.இராசமாணிக்கத்தின் உருவச்சிலை அமைந்துள்ள காணிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.
.jpg)


0 comments :
Post a Comment