9-ம் திகதி வெளியாகவிருக்கும் கோச்சடையான் பட இசையின் பாடல்கள் பட்டியல் - விபரம் இதோ




மார்ச்9-ம் திகதி வெளியாகவிருக்கும் கோச்சடையான் பட இசைத் தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பட்டியலை இன்று வெளியிட்டது சோனி மியூசிக் நிறுவனம்.

இந்தப் பட்டியல்படி மொத்தம் 9 பாடல்கள் இசைத் தட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை அமர கவிஞர் வாலி எழுதியுள்ளார். மற்ற பாடல்களை வைரமுத்து எழுத,ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அவற்றின் விவரம்... 

எங்கே போகுதோ வானம்.. எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே ஆடியோ டீசராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

மெதுவாகத்தான்... அமர கவிஞர் வாலி எழுதிய பாடல் இது. சூப்பர் ஸ்டாருக்காக அவர் எழுதிய கடைசி பாடல். எஸ் பி பாலசுப்பிரமணியம் - சாதனா சர்க்கம் பாடியுள்ளனர்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் சொந்தக் குரலில் பாடிய பாடல் இது. ஒரு பாடல் மாதிரி இல்லாமல்,வசன கவிதை மாதிரி இந்தப் பாடல் வருகிறது. ரஜினியுடன், ஹரிச்சரணும் பாடியுள்ளார். பாடலில் இடம் பெறும் ஜதி: வி உமாசங்கர்

மணப்பெண்ணின் சத்தியம்.. இந்தப் பாடலை லதா ரஜினி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா பாடும் திரைப்படப் பாடல் இது.

இதயம்... சீனிவாஸ், சின்மயி குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு டூயட்.

கோச்சடையான்... இதுதான் படத்தின் தீம் பாடல்.. கேட்க கிட்டத்தட்ட.. தளபதி.. எங்கள் தளபதி பாடல் மாதிரி ஒலிக்கிறது.

மணமகனின் சத்தியம்... ஹரிச்சரண் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். லதா ரஜினி பாடியதன் ஆண் குரல் பதிவு இது.

ராணாஸ் டிரீம் ராணாவின் கனவு எனும் பெயரில் வரும் இந்த இசைத் தொகுப்பை,லண்டன் செஸன்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு உருவாக்கியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

கர்ம வீரன் இசைத் தட்டின் கடைசிப் பாடல் இது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலும் கூட. ஏ ஆர் ரஹ்மானே பாடியுள்ளார். அவருடன் ரைஹானாவும் பாடியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :