அம்பாரை மாவட்டத்தில் மஜீட்புர கிரமத்தையும் சம்மாந்துறை நகரையும் இணைக்கும் வண்டு வாய்க்கால் வீதி கடந்த மூன்று வருடங்களாக குன்றும் குழியுமாக சிதைவடைந்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
மஜீட்புர மக்களின் இதயம் என வர்ணிக்கப்படும் இவ் விவசாய வீதியை தற்போதை கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம் மன்சூர் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக இருக்கும் காலத்தில் யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தார் வீதியாக மாற்றியமைத்து மக்கள் பவனைக்கு கையளித்தார்.
இவ் வீதியால் தினமும் அதிகளவான கனரக வாகனங்கள் செல்வதன் காரணமாகவே இவ் வீதி குன்றும் குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத அளவிற்கு சிதைவடைந்து காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது விடயம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸ் நிலையம், வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றிற்கு எழுத்து மூலம் பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஊடாக அறிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 5 தொன்னிற்கும் குறைவான வாகனங்களே இவ்வீதியினால் பயணிக்க முடியுமென நிறுவப்பட்டிருந்த பதாதைகளைக்கூட அகற்றிவிட்டு கனரக வாகன சாரதிகள் பயணிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மஜீட்புர விவசாய கிராம மக்கள் தமது சுகாதார தேவைக்காக 10 கிலோ மீற்றரிற்கு அப்பாலுள்ள சம்மாந்துறை மற்றும் அம்பாரை வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது.
இவ்வீதி சிதைவடைந்துள்ளதால் இரவு நேரங்களில் நோயாளிகளை எடுத்துச் செல்வதில் கூட பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிடயத்தில் துரித கவனம் செலுத்த வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment