நவநீதம்பிள்ளையை திருமணம் செய்யும் அளவுக்கு இராஜதந்திரம் வீழ்ந்துள்ளது - சோபித்த தேரர்


லங்கையின் அமைச்சரவை அதிகாரம் அற்றது. அதேபோல நாடாளுமன்றத்தினால் பயன் ஏதும் இல்லை என்று சிரேஸ்ட பௌத்த துறவியான மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

சிஙகள செய்தித்தாள் ஒன்று அளித்த செவ்வி ஒன்றில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு முன்னர் பொது எதிர்க்கட்சி ஒன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கட்சி அரசியல் என்பது பௌத்த பிக்குகளுக்கு உகந்ததல்ல. பௌத்த பிக்குகளின் கடமை தேசிய அரசியலுக்கு ஆலோசனை தெரிவிபபதாகும் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான கருத்துக்களை கூறுவதன் காரணமாக தம்மை ஆளும் அரசாங்கங்கள் எதிர்க்கட்சி உறுப்பினராக சித்தரிப்பதாக தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே எதிர்கட்சியில் இருந்த போது ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் என்றுக்கோரி கதிர்காமத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். ஆனால் இன்று அந்த பதவியை நீடித்துள்ளார் என்பதை மாதுலுவேவே சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை காரணமாக இலங்கைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை மறுக்கமுடியாது. நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள அழைக்கும் அளவுக்கு இலங்கையின் இராஜதந்திரம் வீழ்ந்து போயுள்ளதாகவும் சோபித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :