இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்த ஆரம்பமாகியுள்ள உலக இருபது20 தொடரின் முடிவில் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் மற்றுமொரு மூத்த வீரரும் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார நேற்று தனது இருபது20 போட்களுக்கான ஓய்வினை அறிவித்த மறுநாளான இன்று மஹேல ஜயவர்த்தனும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
தனது ஓய்வும் சங்காவின் ஓய்வினை ஒத்த காரணங்களையே கொண்டுள்ளளதாக மஹேல கூறியுள்ளார்.
36 வயதான மஹேல ஜயவர்த்த இதுவரையில் 49 இருபது20 போட்டிகளில் 134.17 என்ற ஸ்ரைக் ரேட்டில் ஒரு சதம் அடங்கலாக 1335 ஓட்டங்கைள 31.78 என்ற சராசரியில் பெற்றுள்ளார். வழக்கமான தனது ஆட்டத்தினை மாற்றி இருபது20 போட்டிகளில் அதிரடியாக ஆரம்ப வீரராகவும் செயற்பட்டார் மஹேல.
தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் முதல் 10 வருடங்களில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து விளையாடத மஹேல இருபது20 போட்டிகளின் பின்னர் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அதனை திறமையாக பயன்படுத்தி ஓட்டங்களைக் குவிக்கிறார்.
இது குறித்து மஹேல கூறுகையில், நான் அனைத்து வகையான போட்டிகளையும் ரசிக்கிறேன். டெஸ்ட் போட்டிகள் எந்தவொரு வீரருக்கும் முக்கியமானது. இருபது20 கவர்ச்சியானது.
பாடசாலைசிறுவனாக எனது துடுப்பாட்டத்தினை மீள விளையாட பல வழிகளில் இருபது20 உதவியது. அதிரடியாகவும் சுத்திரமாகவும் தன்னால் செயற்பட முடிந்தது' என்றார்.
'அடுத்த உலக இருபது20 தொடரில் என்னால் விளையாட முடியாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. எனவே அணியில் இடத்தினை ஆக்கிரமிக்காது இளையவர்களுக்கு அது வழி செய்யும்' எனவும் அவர் குறிப்பிட்டள்ளார்.
அடுத்ததுடுத்து இலங்கை அணியின் முக்கிய மூத்த வீரர்கள் இருவர் இருபது20 போட்டிகளில் ஓய்வு பெறுவது இலங்கை அணிக்கு பின்னடைவாக அமையலாம். ஆனால் மஹேல ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=4746#sthash.B9lFnQhC.dpuf

0 comments :
Post a Comment