எயா விங்ஸ் நிறுவனத்தின் அனுசரனையில் மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டி - படங்கள்



அகமட் எஸ். முகைடீன்-யா விங்ஸ் நிறுவனத்தின் அனுசரனையில் அம்பாறை மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான அணிக்கு ஏழுபேர் கொண்ட ஆறு ஓவர் எயர் விங் மென்பந்து கிறிகட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (16.03.2014) இறக்காமம் குளக்கரை மைதானத்தில் எயா விங்ஸ் நிறுவனத்தின் கிழக்கு மாகாண செயல்திட்ட முகாமையாளர் அப்துல் சலாம் முனாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவரும்மான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், விஷேட அதிதிகளாக இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மௌலவி யூ.கே.ஜாபீர், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர், விதாதா வள நிலைய உத்தியோகத்தர் எம்.எல்.முஸ்மி, சிரேஷ்ட ஆசிரியர் யூ.எல்.ஜிப்ரி, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ. அமீர், கௌரவ அதிதிகளாக இறக்காமம் அஸ்ஸபா வித்தியாலய அதிபர் பி.ரி.சுபைர், குடிவில் அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் எம்.ஏ.பஜீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் 25 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றிய மேற்படி சுற்றுப்போட்டியில் நொக் அவுட் முறையில் இறுதிப்போட்டிக்கு இறக்காமத்தைச் சேர்ந்த பிரில்லியன் மற்றும் யங் போயிஸ் விளையாட்டுக் கழகங்கள் தெரிவானது.

இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிர்லியன்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல ஓவர்களையும் பூர்த்தி செய்து 5 விக்கட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யங் போயிஸ் அணி ஒரு பந்து வீச்சு மீதமிருக்கும் நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 40 ஓட்டங்களை பெற்றது. பிர்லியன் விளையாட்டுக் கழகத்தினர் 29 மேலதிக ஓட்டங்களினால் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :