எமது கோரிக்கைகளை ஜனாதிபதி புறந்தள்ளி விட்டார் - அமைச்சர் வாசுதேவா நாணயக்கார கவலை



ஜெ
னிவா அமர்வுகள் தொடர்பில் முன்வைத்த தமது பரிந்துரைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நிராகரித்துள்ளார் என்று தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 ஆறு அமைச்சர்கள் கூட்டாக இணைந்து ஜெனிவா அமர்வு கள் குறித்து ஜனாதிபதிக்கு சில பரிந்துரைகளைச் செய்திருந்தனர். அமைச்சர்களான வாசு தேவ நாணயக்கார, ரெஜி னோல்ட் குரே, ராஜித சேனா ரட்ன, டியூ குணசேகர, திஸ்ஸ வித்தாரண, நவீன் திஸா நாயக்க ஆகியோரினால் சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக, அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகளை எவ்வாறு எதிர்நோக்குவது என்பது குறித்து இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டி ருந்தன என்று அமைச்சர் கூறினார்.

 சட்டச் சிக்கல்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை ஆராய்வதற்கு இரண்டு ஆணைக் குழுக்களை உடனடியாக நியமித்து ஆராயுமாறு அமைச் சர்கள் கோரியிருந்தனர். எனினும் இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்தராஜபக் புறந்தள்ளி விட்டார் என்று அமைச்சர் வாசுதேவ தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :