நிந்தவூரில் லங்கா விவசாயப் பேரவையின் அம்பாரை மாவட்ட மாநாடு.




ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

ங்கா விவசாயப் பேரவையின் அம்பாரை மாவட்ட மாநாடு இன்று நிந்தவூர் சீ.எச்.எப் றெஸ்ட்டுறண்ட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாரம்பரிய நெல் உற்பத்தியில் இரசாயனப் பாவனையைத் தவிர்த்து, நஞ்சுக்
கலப்பற்ற, தூய்மையான அரிசி உற்பத்தியைப் பெருக்கி, ஆரோக்கியத்துடன்
வாழ்வோம்' எனும் தொணிப் பொருளில் இம்மாநாடு இடம் பெற்றது.

அம்பாரை மாவட்டப் பேரவையின் தலைவர் எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் லங்கா விவசாயப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சோமசிறி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ரவிந்திர காரியவாசம்,
விரிவுரையாளர் ரஞ்சித் கொட்ட தெனிய ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( யுகுயுசுனு) அனுசரனையுடன் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரை மாவட்டத்திலுள்ள முன்னணி விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள், போடிமார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :