இந்த மோசடியை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே, போலீ சார் இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க போலீசா ருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வங்கி மோசடி தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ஜெயசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக் கப்பட்டது.தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் அனை வரும் சைதாப்பேட்டை, சின்னமலையில் உள்ள மெட்ராஸ் சிட்டி லாரி ஓனர் அசோசியேஷன் பாரத் பெட்ரோலியம் பங்க்கில் பெட்ரோல் போட ஏடிஎம் கார்டை கொடுத்த பிறகுதான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க்கில் பணியாற்றிய காசாளர் அனகாபுத்தூரை சேர்ந்த பார்த்திபன் (28), அவனது கூட்டாளிகள் பழவந்தாங்கல் ஷாஜகான் (25), அனகாபுத்தூர் விஜயகுமார் (27), ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி செல்வகுமார் (32), பொழிச்சலூர் மீனாட்சி (31) மற்றும் இலங்கை ஆசாமி பிரேம் என்ற செல்வநேசன் (34) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, “பெட்ரோல் பங்க்கிற்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளின் ரகசியங்களை ஸ்கிம்மர் கருவி மூலம் எடுத்து, பின்னர் ஸ்கிம்மர் கருவியில் பதிவான ரகசியங்களை போலி ஏடிஎம் கார்டில் பதிவிறக்கம் செய்து 25 லட்சம் வரை மோசடி செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து 6 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஸ்கிம்மர் கருவி, போலி ஏடிஎம் கார்டுகள், 5 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடி நடந்தது எப்படி என்பது குறித்து, கைது செய்யப்பட்ட பார்த்திபன் கூறியதாக போலீசார் கூறியதாவது:பாரத் பெட்ரோலியம் பங்க்கில் காசாளராக பணி செய்து வந்தேன். அப்போது, எனக்கு இலங்கையை சேர்ந்த பிரேம் என்ற செல்வநேசன் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம்மின் ரகசியங்களை திருடுவதில் கை தேர்ந்தவர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எனது ஆசையை அவரிடம் தெரிவித்தேன். அவர் விரைவில் பணக்காரன் ஆகும் யுக்தியை கற்று தருவதாக கூறினார். அதன்படி, பெட்ரோல் பங்க்கிற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சுரண்டினால், பணத்திற்கு பணமும் கிடைக்கும், செய்த வேலைக்கு சம்பளமும் கிடைக்கும் என்ற பாணியில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த முடிவு செய்தோம்.
முதற்கட்டமாக செல்வநேசன் ஒரு ஸ்கிம்மர் கருவியை எங்கிருந்தோ கொண்டு வந்தார். அதன் விலை ரூ.25 ஆயிரம் என குறிப்பிட்டார். எங்களது திட்டத்தை பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வந்த சக பணியாளர்கள் ஷாஜகான், செல்வகுமார், விஜயகுமார் மற்றும் மீனாட்சி ஆகியோரிடம் தெரிவித்தோம்.

அவர்கள் எங்கள் வலையில் வீழ்ந்தனர். இதுவரை ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளோம். யாரும் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்தோம். ஆனால், போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர் என்று பார்த்திபன் போலீசாரிடம் கூறினார்.

0 comments :
Post a Comment