மாயமான விமானத்தைத் தேடும் பணியில் பல நாட்டு கப்பல்களும், விமானங்களும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மலேசிய அரசு மந்திரவாதிகளின் உதவியை நாடியுள்ளது.
இப்ராஹிம் மத் ஸின் என்ற புகழ்பெற்ற மந்திரவாதி, கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வரவழைத்த மலேசிய அரசு, கடந்த சனிக்கிழமை காலை காணாமல் போன விமானம் தற்போது எங்கிருக்கிறது என்பதை அறிந்து சொல்றுமாறு கூறியது.
பல்வேறு மந்திரப் பொருட்களை வைத்து, மாயாமான விமானம் குறித்து இப்ராஹிம் மத் ஸின் கூறியதாவது, தற்போது அந்த விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் நிச்சயம் அது விபத்துக்குள்ளாகி, நீருக்கடியில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும், பொதுமக்கள் பலரும், ஆதரவாகவும், எதிர்த்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment