கத்தரீன் டெப்றில், (தற்போது 27 வயது) கடந்த 2 ஆம் திகதி முதல் பேஸ்புக் இணையத்தளம் மூலம் தனது சொந்த தாயாரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அவரால் தனது தாயாரை தேடி வெளியிடப்பட்ட செய்தி 30000 தடவைகள் பரிமாறப்பட்டதையடுத்து அந்த செய்தி கத்தரீனது சொந்த தாயாரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் பெயர் வெளியிடப்படாத மேற்படி தாய் சட்டத்தரணி மூலம் கத்தரீனை தொடர்பை ஏற்படுத்தி அவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள அலென்டன் நகரிலுள்ள உணவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கத்தரீன் அந்த உணவகத்தின் பெயரால் கிங் பர்கர் குழந்தை என செல்லமாக அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை கத்தரீனும் அவரது தாயாரும் முதன் முதலாக சந்தித்துள்ளனர்.
இது தொடர்பில் கத்தரீன் விபரிக்கையில் எனது தாயாரை முதல் முதலாக சந்தித்தபோது விபரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்தேன். நான் கற்பனை செய்து பார்த்ததை விட அவர் மிகவும் இனிமையானவராக உள்ளார் என கத்தரீன் கூறினார்.
கத்தரீனின் சட்டத்தரணியான ஜோன் வால்டன் கூறுகையில், தனது வாடிக்கையாளர் 16 வயதில் வெளிநாட்டுக்கு சென்றவேளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் இதனால் கர்ப்பமடைந்த அவர் தனது குடும்பத்தினரிடமிருந்து கர்ப்பத்தை மறைத்து பிறந்த குழந்தையை உணவக மலசல கூடத்தில் கைவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment