வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் -குணரத்தின


ந.குகதர்சன் -
டக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். ஆனால் இராணுவமோ அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கான பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகிறது. என்று மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன் தெரிவித்தார்.

நேற்று திங்கள்கிழமை வாகரை பிரதேசம் புணாணை கிழக்கில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். இராகுலநாயகி தலைமையில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது...

எமது அமைச்சினால்; 3 இலடச்சம் ரூபா பெறுமதியான வீடுகள் கட்டுவதற்க்கான நிதி உதவி; வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பூர் போன்ற இடங்களில் இராணுவத்தினர் 10 இலட்ச்சம் ரூபா பெறுமதியான வீடுகளைக் கட்டிக் கொடுத்து மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

சம்பந்தன் அவர்களை ஒன்றினைந்து மக்களுக்காக வேலை செய்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தேன் ஆனால் அதற்க்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. கௌரவ ஜனாதிபதி அவர்கள் எனக்கு மீள்குடியேற்ற அமைச்சுப் பதவி வழங்கும் போது பிரதி அமைச்சராக வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை பிரதி அமைச்சராக நியமனம் செய்து தந்தார்.

அதற்க்கு அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர் வடக்கு கிழக்கைப்பற்றி நன்கு அறிந்தவர். அதனாலேயே அவரிடம் இப்பகுதிகளுக்கான முக்கிய பணிகளை ஒப்படைத்துள்ளேன்.

இந்திய வீட்டுத்திட்டம் 4000 வீடுகள் அமைப்பதற்க்;கான வேலைத்திட்டம் யாவும் இவரிடமே ஒப்படைத்துள்ளேன். ஜனாதிபதி அவர்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு கூறியுள்ளார். என்று அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :