பால் மாவின் விலையை குறைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது - மைத்திரிபால சிறிசேன


பால் மாவின் விலையை குறைக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பால் மாவின் விலையை குறைக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பால் மா விலையை அரசாங்கமா அதிகரித்தது? பல்தேசிய நிறுவனங்களை எம்மைப் போன்ற நாடு ஒன்றினால் கட்டுப்படுத்த முடியாது.

பல்தேசிய நிறுவனங்கள் உலகின் பலம்பொருந்திய அரசாங்கங்களையே ஆட்டம் காணச் செய்கின்றன என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பல்தேசிய நிறுவனங்களுக்கு தேவ்வாயன வகையில் பால் விலையை உயர்த்த அநுமதிக்க முடியாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :