கோறளைப்பற்று பிரதேச சபை பொதுச் சந்தை கட்டடத் தொகுதிக்கு முன்பாக சுதந்திர தின நிகழ்வு



ந. குகதரசன் 
வாழைச்சேனை கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கம், வாழைச்சேனை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின நிகழ்வை இன்று செவ்வாய்கிழமை நடாத்தியது.

இதன்போது வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக இராணுவப் பொறுப்பதிகாரி தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திர தின நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இங்கு கோறளைப்பற்று தமிழ் வர்த்தக சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள், தமிழ் வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சங்க நிருவாகிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி சாரணிய மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு வீதியால் சென்றவர்களுக்கு குளிர்பானங்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :