பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து சிறிகொத்தவிற்கு அருகில் ஆர்ப்பாட்டம்

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் லக் வனிதா முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோசி சேனாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், 400 கிராம் பால் மா 61 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால் மா 152 ரூபாவினாலும் அதிகரித்தது.

பால் மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாத நிலையில் தாய்மார்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பால் கலந்து தேநீரை அருந்துவது மக்களுக்கு கனவாக மாறியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :