பி. முஹாஜிரீன்-
இலங்கையின் 66 வது சுதந்திர தினத்தையொட்டி பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின சிநேகபூர்வ கிரிக்கட் சற்றுப்போட்டி இன்று (04.02.2014) நடைபெற்றது.
பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் பாலமுனை அல் அறபா மற்றும் பாலமுனை சுப்பர் ஓக்கிட்; அணியினருக்கிடையே நடைபெற்ற இக்கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு அல் அறபா விளையாட்டுக் கழகத் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம். ஏ. அன்சில் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜூதீன், சின்னப்பாலமுனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத் தலைவர் பி. முஹாஜிரீன் உட்பட இராணுவ உத்தியோகத்தர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
மூன்று போட்டிகள் கொண்ட இச்சுற்றுப் போட்டித் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற பாலமுனை சுப்பர் ஓக்கிட் சுதந்திர தினக் கிண்ணத்தைச் சுவீகரித்து சம்பியனாகியது.
.jpg)




0 comments :
Post a Comment