அட்டாளைச்சேனை ஹபிபியா விளையாட்டுக்கழகத்தினால் நடத்தப்பட்ட கிரிகற் சுற்றுப்போட்டி - படங்கள்



எம். பைஷல் இஸ்மாயில்-

ட்டாளைச்சேனை ஹபிபியா விளையாட்டுக்கழகத்தின் முதலாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கொழும்பு தெகிவளை இத்திகாத் அணியினர்  (02.02.2014) சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டனர்.

அகில இலங்கை ரீதியில் உலமாக்கள், ஹாபில்கள், மத்ராஸா மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டியில் வெளிமாவட்டங்கள் உட்பட பிரபல்லியமிக்க 36 விளையாட்டுக் கழங்கள் பங்குபற்றி இருந்தன.

அணிக்கு ஏழுபேர் கொண்ட ஐந்து ஓவர்களைக் கொண்ட இந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் அட்டாளைச்சேனை அரசினர் ஆசரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவான அட்டாளைச்சேனை ஹபீபியா விளையாட்டுக் கழகம் கொழும்பு தெகிவளை இத்திஹாத் அணியை எதிர்த்து ஆடியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஹபீபியா அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி ஐந்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு இத்திஹாத் அணியினர் நான்கு ஓவர்கள் முடிவில் தமக்கு நிர்ணயிக்கப்படடிருந்த இலக்கை மிக இலகுவாக எட்டி மூன்று விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர்.

வெற்றிபெற்ற அணியினருக்கு ரூபா 30,000 பணப்பரிசிலும் வெற்றிக் கிண்ணமும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனிபா மதனியினால் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் சுற்றுப் போட்டியின் சிறந்து பந்து வீச்சாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ஆகியோருக்கான துடுப்பாட்ட மட்டை பரிசில்களில் பிரதம அதிதி தனது கையொப்பமிட்டு இன்றைய நிகழ்வின்போது வழங்கி வைத்தார்.

சுற்றுப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹபிபியா கழகத்தைச் சேர்ந்த எஸ்.சப்ரீன் மௌலவி தெரிவு செய்யப்பட்டார். மௌலவி எஸ்.அப்துஸ்சமது தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹனிபா கலந்து கொண்டதுடன், பஹத் ஏ.மஜீட் விசேட அதிதியாகவும், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன், லக்கி விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், நடுவராக கடமையாற்றிய எம்.ஹம்மாத் ஆசிரியர் ஆகியோர்களினால் வீரர்களுக்கு பரிசில் வழங்கி வைத்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :