தமிழ் பாடம் கற்பிக்க ஆசிரியர் எவரும் இல்லை -மஹாவித்தியாலயம் ஒன்றின் அவல நிலை.

எம்.பைஷல் இஸ்மாயில்-
க்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு உற்பட்ட அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் அமைந்துள்ள பாலமுனை மின்ஹாஜ் மஹாவித்தியாலயத்தில் கடந்த வருடமுதல் தமிழ் பாடம் கற்பிப்பதற்கான பாட ஆசிரியர் எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

பாலமுனைக்கிராமத்தில் இருக்கின்ற பிரதான பாடசாலையான இப்பாடசாலையில் அப்பிரதேசத்தில் வாழ்கின்ற ஏழைப்பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர்.

தாய்மொழியில் சித்தியடையாது வேறு எப்பாடத்திலும் உயர் சித்தியடைந்த போதிலும் கூட அது மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்ற நிலையை அறிந்திருந்த போதிலும் இற்றைவரை தமிழ் பாடம் கற்பிப்பதற்கான பயிற்றப்பட்ட ஆசிரியர் எவரும் நியமிக்கப்படாத நிலை காணப்படுகிறது.

இதே வேளை கடந்த வருடம் தமிழ் பாடம் கற்பிப்பதற்காக ஆரம்பப்பிரிவில் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். குறித்த ஆசிரியருக்கு பொத்துவில் பாடசாலை ஒன்றுக்கு இடமாற்ற உத்தரவு வந்த போதிலும்கூட அவர் தமிழ் பாடம் கற்பிப்பதனைக் காரணமாக முன்னிறுத்தி அந்த இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டது.

நிலமை இவ்வாரிருக்க பாடசாலையின் அதிபர் இதுவரை தமிழ் பாடம் கற்பித்து வந்த குறித்த ஆசிரியரை பதிலீடு எதுவுமற்ற நிலையில் வேலைவாய்ப்பொன்றிற்காக வெளிநாடு செல்வதற்கு விடுவிப்புச் செய்துள்ளார்.

வலயக்கல்விப் பணிப்பாளர் பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்கின்ற அதேவேளை மின்ஹாஜ் மஹாவித்தியாலயத்தில் தமிழ் பாடம் கற்பிக்க இதுவரை ஆசிரியர் எவரையும் நியமிக்காததோடு இடைவெளி நிரப்புகின்ற அடிப்படையில் தமிழ் பாடம் கற்பித்து வந்த ஆசிரியருக்கு பதிலீடு எதுவும் இன்றி விடுவிக்க அதிபரினால் செய்யப்பட்ட சிபாரிசினை மேல் சிபாரிசு செய்து அவ்விடுவிப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் வலயகல்விப் பணிப்பணிப்பாளராய் இருந்த போதிலும்கூட தனது சொந்தக்கிராமத்திலேயே மஹாவித்தியாலயம் ஒன்றிற்கு தமிழ்பாட ஆசிரியரை நியமிக்க முடியாத கையறு நிலையில் இருப்பது மட்டுமன்றி இதுவரை காலமும் கற்பித்த ஆசிரியர்கூட பதிலீடின்றி விடுவிப்புச் செய்தமை இக்கிராம ஏழை மாணவர்களின் கல்வியின் மீது அவர் கொண்டிருக்கின்ற அபரிமிதமான அக்கரையை காட்டுவதாக இருக்கிறது.

அதிபரும் வலயக்கல்விப் பணிப்பாளரும் இவ்வாறிருக்கின்ற நிலையில்
பாலமுனைக்கிராம மாணவர்களின் பெற்றோர்கள் இவ்விடயங்களில் பாராமுகமாக இருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :