நாங்கள் பத்திரிகை அறிக்கைகளை வைத்து அரசியல் நடாத்துவதில்லை - ஆரிப் சம்சுதீன்

சுலைமான் றாபி-

டந்த தேர்தலின் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். நாம் ஒரு போதும் பத்திரிகை அறிக்கைகளை வைத்து அரசியல் நடாத்துவதில்லை. 

எங்களால் நடைமுறைப் படுத்த முடியுமான வேலைகளை மட்டுமே நடைமுறைபடுத்துவோம் என நிந்தவூர் முத்தகீன் பல்தேவைக் கட்டிடத்தில் இன்று (15.01.2014) இடம்பெற்ற "வாழ்வின் ஒளி" நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்: வாழ்வின் ஒளி என்னும் இந்நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் மக்களுக்குத்தேவையான வாழ்வாதார உதவிகளை செய்து கொண்டு வருகின்றோம். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை தொடர்ந்தும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ செய்ய முடியாது. கடந்த காலங்களில் நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை போன்ற பிரதேசங்களில் இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்தி இதன் மூலம் ஒரு வருமானத்தினையும் பெற்றுக் கொடுத்தோம். 

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து பின்னர் மக்களை சந்திக்காது இருக்கின்ற அரசியல் வாதிகலல்ல நாங்கள். வடகிழக்கு ஒன்றிணைந்த மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்றதொரு சாத்தியப்பாடான, பயன்தரக்கூடிய நிலைமையினை தலைவர் அதாஉல்லாஹ் அவர்கள் முன்வைத்து அதில் வெற்றிபெற்றார். ஆனால் இன்று கிழக்கு மாகாணத்திற்கென்று பல அமைச்சுக்களும், பல நன்மைகளும் எல்லா மக்களையும் சென்றடையக்கூடிய நிலைமையில் காணப்படுகின்றது. 


கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்று புலிகளின் வேட்டுக்களுக்கு மத்தியில் அவரின் தலைக்கு குறி வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தைரியமாக தனது உயிரையும் துச்செமென நினைத்து கிழக்கு தனியாக இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை எடுத்தார். எந்தவொரு அரசியல் வாதியும், உரிமைகள் என்று கூறிக்கொள்ளும் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த நிலப்பாட்டினைகொண்டிருக்க வில்லை. தேர்தல் காலங்களில் வருவது, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையென்று அறிக்கைகள் விடுவது ஆனால் அந்தக் காணிகள் சம்பந்தமாக இதுவரை எந்தவொரு ஆக்க பூர்வமான ஒரு உரிமையை பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இதுவரை உரிமை பற்றி பேசும் கட்சியினால் எடுத்துகொள்ள முடியவில்லை. கல்வி வறுமையை ஒழிப்பதற்கான மூல காரணியாக இருக்கிறது. அறிவு புகட்டப்பட வேண்டும். மக்கள் தங்கள் வளங்களை எவ்வளவு அறிவு பூர்வமான விதத்தில் பிரயோகிகின்றார்களோ அதன் மூலமே அவர்களின் வறுமையினை ஒளிப்பதற்கான வழிவகைகளை செய்யலாம்.


இதேவேளை தற்காலத்தில் கல்விக்கூடங்கள் அரசியல் வாதிகளினால் தங்களின் செல்வாக்கினை அதிகரிக்க வேண்டும், தாங்கள் மட்டும்தான் அந்த கல்லூரிற்கு செல்ல வேண்டும் தங்களின் அரிவருடிகள் அந்த கல்லூரிகளில் தங்கள் நிகழ்ச்சித்திட்டங்களை மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது தங்கள் கட்சிகளின் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு அதிபராக இருக்கவேண்டும் என்று ஒரு கல்வி அதிகாரி எதிர்பார்ப்பாராயின் அவர் பொறுப்புக்களைப்பற்றி அறியாதவராக இருக்கின்றார் என்பதனை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. அப்படி ஏதும் நடந்தேறினால் நிச்சயமாக நாம் அப்படியான நியமனங்களை எதிர்ப்போம். எதிர்வரும் காலங்களில் நாம் அதிபர் மாற்றங்களை எதிர்பார்க்கின்றோம். இதில் எல்லோருடைய வளங்களைப் பயன்படுத்தி அந்தந்த கல்லூரிகளை அபிவிருத்தி செய்யும் அதிபர்களைத்தாம் நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் திறமை புறந்தள்ளப்பட்டு அரசியல் சித்தாந்தம் பூசப்பட்ட அதிபர் நியமனம் வெற்றியடையும் என்றால் அந்த திறமைக்கு முதலிடம் அளிக்கப்படாமல் அந்தக் கல்லூரிகள் பின்தள்ளப் படக்கூடிய நிலைமைகள் உருவாகும். எனவே இதனை சம்பந்தப்பட்ட கல்வியதிகாரிகள் நன்கு அலசி ஆராய வேண்டும்.


மேலும் ஒரு பாடசாலைக்கு அதிபர் நியமனம் ஒன்று இடம்பெறுவதென்றால் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு அதில் தகுதி அடிப்படையில் தெரிவாகுபவரே அதிபராக நியமிக்கப்படல் வேண்டும். அரசியல் சித்தாந்தம் பூசப்பட்ட அதிபர் நியமனங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அதனை நாம் கண்டிப்போம் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வின் 45 குடும்பங்களுக்கு வாழ்வாதார பொருட்களும் 02 குடும்பங்களுக்கு கிணறு கட்டுவதற்காக தலா 50,000.00 (ஐம்பதாயிரம்) ரூபா காசோலைகளும் வழங்கப்பட்டன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :