ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சென்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் கமெரா திருடிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா மற்றும் கென்யாவுக்கு தனது விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த, நாடு திரும்பும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டுபாய் விமான நிலையத்தில் ஜனாதிபதி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவரது ஊடகக் குழுவில் இடம்பெற்றிருந்த படப்பிடிப்பாளர் நான்கு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கமெரா ஒன்றினைத் திருடியுள்ளார்.
தனது பையினுள் மறைத்துக் கொண்டு செல்ல முற்பட்டபோது, விமான நிலையத்தில் இருந்த கமெரா மூலம் பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
உடனே குறித்த படப்பிடிப்பாளரைக் கைது செய்த அதிகாரிகள், விசாரணை செய்துள்ளனர். குறித்த நபர், ஜனாதிபதியின் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என தெரியவந்ததும் அவரை எச்சரித்து ஜனாதிபதிக்கு மதிப்பளிப்பதாகக் கூறி விடுதலை செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த படப்பிடிப்பாளர் நாடு திரும்பியதும் பணியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.

0 comments :
Post a Comment