உலகில் முதல் முறையாக 75 வயது முதியவருக்கு செயற்கை இருதயம் பொருத்தி வைத்தியர்கள் சாதனை

பிரான்ஸ் நாட்டில் உள்ள கார்மத் என்ற உயிர் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் இந்த செயற்கை இருதயத்தை வடிவமைத்துள்ளது. காது மிஷின் போலவே, இந்த செயற்கை இருதயம், உடலில் வெளி யில் பொருத்தக்கூடிய லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும்.பாரிசில் உள்ள ஜார்ஜஸ் பிராம்ட்யு மருத்துவமனை நிபுணர்கள் இந்த செயற்கை இருதயத்தை 75 வயது முதியவருக்கு பொருத்தியுள்ளனர். 

இவருக்கு இருதயம் பழுதுபட்டதை தொடர்ந்து செயற்கை இருதயம் பொருத்தப்பட்டது. இப்போது செயற்கை இருதயம் சிறப்பாக இயங்கி வருகிறது என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன்பும் செயற்கை இருதயம் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக மாற்றாக தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகில் முதன் முறையாக இப்போது தான் வாழ்நாள் 5 ஆண்டு நீடிக்கும் வகையில் செயற்கை இருதயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடல் ஏற்க வேண்டும் என்பதால், இந்த செயற்கை இருதயமும், அதற்கு தேவையான திசுக்கள் உட்பட துணை பொருட்களும் கால்நடை உயிரினங்கள் மூலமாக எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள் ளது.

ஒரு கிலோவுக்கும் குறைவான எடை யில் செயற்கை இருத யம் உள்ளது. இயற்கை இருதயத்தை விட அதிக எடை தான். எனினும் உயிரின திசுக்கள் மூலம் தசைகள் உட்பட எல்லாம் பொருத்தப்படுவதால் இருதயத்துக்கு ரத்தம் பாய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. 

நோயாளி இப்போது மாமூல் நிலைக்கு வந்து விட்டார். அவர் சிறிது சிறிதாக நடக்க அனுமதிக்கப்படுகிறார். எந்த கோளாறும் இதுவரை ஏற்படவில்லை என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :