தொடர்ந்தும் புறக்கனிக்கப்படும் மட்டக்களப்பு முஸ்லிம்கள் - ஜுனைட் நளீமி

பொது நலவாய நாடுகளின் மாநாடு இம்முறை இலங்கையில் சிறப்பாக இடம்பெற இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

மாநாட்டில் களந்து கொள்ள வருகை தரவுள்ள பிரதிநிதிகள் குழு மட்டக்களப்புக்கும் விஜயம் மேற்கொண்டு யுத்தத்தினால் பாதிப்படைந்த பிரதேசங்களை பார்வையிடுவதுடன் யுத்தத்திற்கு பின்னரான நிலை குறித்தும் களந்துறையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர். 

இந்தவகையில் மட்டக்களப்பு பிரஜைகள் குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

மாவட்டத்துக்குள் வாழும் தமிழ், சிங்கள சகோதர இனப்பிரதிநிதிகளை சந்திப்பது யுத்தத்திற்குப்பின்னரனா நல்லினக்க நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் உதவ வழி வகுக்கும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. 

என்ற போதும் கடந்த கால யுத்த நடவடிக்கையினால் மிகவும் பாதிப்படைந்த சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்படாமை கவலை அழிப்பதாக உள்ளது. சர்வதேச தூதுக்குழுக்கள், உயர்மட்ட பிரதிநிதிகள் வருகைகளின் போது இவ்வாரான புறக்கணிப்புக்கள் இடம்பெருவது சமூக நல்லிணிக்க செயற்பாட்டில் பின்னடைவையும் சமூகங்களுக்கிடையில் சந்தேகங்களையும் தொடர்ந்தும் தோற்றுவிக்கும். 

வருகை தரும் பிரதிநிதிகள் முதலில் புலிகளினால் பள்ளிவாசல் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருந்த காத்தான்குடி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்வதாக ஆரம்பத்தில் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்த போதும்,பின்னர் மட்டக்களப்பு நகரப்பள்ளிவாசலில் முஸ்லிம்பிரதிநிதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

ஆனால் அதுவும் இறுதி தருவாயில் நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை இன்னும் சந்தேகங்களை தோற்று விக்கின்றது. எனவே இவ்வாரான திட்டமிட்ட ஒதுக்கள் செயற்பாடுகல் தொடராவன்னம் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதுடன், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இவ்விடயத்தில் மெளனித்திருப்பது ஆரோக்கியமானதாக அமையாதென கருதுகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :