
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக 20084 சுற்று நிரூபத்தின் கீழ் பயனாளிகளுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த 9ம் திகதி காலை 10.30 மணிக்கு குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண கல்வி கலாச்சார விவகார மற்றும் காணி காணி அபிவிருத்தி அமைச்சர் விமல வீர திஸானாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் காணி மற்றும் காணி பிரதி அமைச்சர் ஸ்ரீபால கம்லத் அவர்களின் தலைமையில் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் காணி அமைச்சினுடைய காணி ஆணையாளர் நாயகம் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் மற்றும் அதன் உயராதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது இதன்போது 302 காணி பத்திரங்கள் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டது அதற்காண விண்ணப்பங்கள் 2008ம் ஆண்டு விண்ணப்பிக்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் காணி பிரச்சிணைகள் அதிகமாக ஏற்பட்டமை குறித்து மாகாண சபைக்கு மா.சபை.உறுப்பினர் அன்வரால் பல முறை பிரேரணை கொண்டு செல்லப்பட்டது மாத்திரமன்றி காணிப் பத்திரங்களை வழங்குவதற்காக கி.மா.காணி அமைச்சரின் தலைமையில் விசேட கூட்டங்கள் நடத்தப்பட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளரூடாக குறித்த பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டு முதன் கட்டமாக இவ்வைபவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
இவ்வாறு தொடர்ந்தும் இப்பிரதேசங்களில் இடம்பெறும் காணி பிரச்சிணைகளை அடையாளம் காணப்பட்டு கி.மா.காணி ஆணையாளரூடாக குறித்த பிரதேச செயலாளரின் ஒத்தழைப்புடன் மிகிதமாகவுள்ள காணி அற்றோர் காணிகள் இருந்தும் இதுவரை அனுமதிப் பத்திரம் கிடைக்க பெறாதவர்களுக்கும் மாகாண சபையினூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாகாண சபை உறுப்பினர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடார்.




0 comments :
Post a Comment