சூப்பர் ஸ்டார்களுடன் இணைவாரா நடிகர் சூர்யா?

கொலிவுட்டின் முன்னணி நடிகரான சூர்யா மலையாளத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஞ்சிவரம், லேசா லேசா, சினேகிதியே போன்ற தமிழ் படங்கள் இயக்கியதுடன் பல்வேறு மலையாளம், இந்தி படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன்.

இவர் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார்.

இந்த படத்திற்கு குஞ்சலி- மரக்கர் என பெயரிடப்பட்டிருக்கிறது.

குஞ்சலி மரக்கர் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லாலும், போர் வீரனாக மம்மூட்டியும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பது குறித்து பிரியதர்ஷன், இன்னும் முடிவாகவில்லை, கதை விவாதத்தில் பிஸியாக இருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.

சரித்திரக் கதையம்சம் உள்ள இப்படத்துக்கான கதாநாயகிகள் தெரிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :